பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

55

"ரகுநாத சேதுபதி
மகராசன் சீமையிலே

மாதமும்மாரி பெய்யுதுன்னு

சுகபோக வாழ்க்கையைச்

சொல்லுங்கடி பெண்டுகளா!

இகபர செளக்கியத்துக்கு

ரகுநாத சேதுபதி

ஏதும் கவலை இல்லாத

ராஜ்யத்தின் கீர்த்திகளை

இதமாகப் பாடுங்கடி இந்த

சுகபோக வாழக்கையைச்

சொல்லிக் குத்துங்கடி"

என்று அவர்கள் பாடிக் கொண்டிருந்த இனிய குரலில் ரங்க கிருஷ்ணனே ஓரிரு கணம் தன்னை மறந்து சொக்கிப் போய் விட்டான். வைரம் பாய்ந்த கருந்தேக்கில் இழைத்து இழைத்து மெருகேறியது போன்ற அந்தப் பெண்களின் கட்டான உடலழகும் ஒன்றோடொன்று போட்டியிட்டன. அவர்களது வள்ளைப் பாட்டில் இருந்த கிழவன் சேதுபதியின் கீர்த்தியைக் கேட்ட போது ஐந்தாறு வயதுச் சிறுவனாக இருந்தகாலை, தாய் ராணி மங்கம்மாளுடன் தான் இராமேஸ்வரம் சென்றிருக்கையில் பார்த்திருந்த அந்தச்சிங்கம் போன்ற தோற்றத்தை உடைய கம்பீரமான ஆகிருதியை நினைவில் ஒன்று கூட்டிப் பார்க்க முயன்றான் ரங்க கிருஷ்ணன்.

அந்த நினைப்பே ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தது. மலை உயர்ந்து எதிரே வந்து நின்றது போன்ற அந்தத் தோற்றமும் வீரகம்பீரத்தை எடுத்துக்காட்டிய வளமான மீசைகளும், கூரிய விழிப் பார்வையும் பாறை போல் பரந்த மார்பும் வலிய பருத்த தோள்களுமாகக் கிழவன் சேதுபதியின் காட்சி மனக்கண்ணில் படர்ந்தது. மறவர் சீமை அவரை வீரவணக்கம் செய்து கொண்டிருந்தது. மறவர் சீமையின் ஏழைப் பெண்களுக்கெல்லாம் அரண்மனைச் செலவில் திருமணம் செய்து உதவியதன் மூலமாகத் தெற்கத்திச் சீமையில் கன்னியாகுமரிஅம்மனைத் தவிர வேறு