பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

63

காமல் ஒரு சுயாதீனமான நாட்டின் அரசன் மற்றொருவனை வரவேற்பதுபோல் மந்திரி பிரதானிகள் வந்து வரவேற்றுக் கொண்டிருந்தனர். புலவர்களையும், கலைஞர்களையும் சாக்குச் சொல்லிவிட்டுச் சேதுபதி சாமர்த்தியமாகக் கொலு மண்டபத்துக்குள்ளேயே இருந்து கொண்ட சாதுரியம் அவனுக்குப் புரிந்தது. புரிந்து என்ன செய்ய? அதற்குள்ளேயே அவனது சொந்தப் படைவீரர்களில் பெரும்பாலோர் சேதுபதியின் வீரர்கள் அளித்த சுக்கு மணம் கமழும் இனிய குளிர்ந்த பானகத்தையும், இளம் வெள்ளரிப் பிஞ்சுகளையும் இரசித்துச் சுவைக்கத் தொடங்கியிருந்தனர். எங்கும் உறவும் இணக்கமும் தெரிந்தனவே தவிரப் பகைமையோ, குரோதமோ தெரியவில்லை.

வேறுவழியின்றித் தன் நம்பிக்கைக்குரிய இரண்டொரு சுயஜாதிப் படைத் தலைவர்களோடு சேதுபதியின் ஆட்கள் வழிகாட்டி அழைத்துச்செல்ல அவர்களோடு கொலுமண்டபத்திற்குச் சென்றான் ரங்ககிருஷ்ணன்.

கொலு மண்டபத்தைச் சுற்றிலும், உட்கோட்டையிலும் மல்யுத்தம் புரிபவர்கள் போல் கட்டுமஸ்தான மறவர் சீமை வீரர்கள் நிறைந்திருந்தனர். உட்கோட்டையும், அரண்மனையும் ஆயிரக்கணக்கான வீரர்கள் நிறைந்து தென்பட்டன. எல்லாம் இயல்பாகவும் சகஜமாகவும் தெரிந்தாலும் கோட்டைக்குள் வந்திருக்கும் மரியாதைக்குரிய எதிரி முரண்டினால் அடுத்த விநாடியே, அடக்கிவிட ஏற்பாடுகள் ஆயத்தமாயிருப்பது நன்கு புரிந்தது. விசாலமான அந்த அரண்மனையின் கொலுமண்டபத்தில் ரங்க கிருஷ்ணன் உள்ளே நுழைந்தபோது மயில் நடனம் எனப்படும் மயில் ஆட்டம் ஆடி முடித்திருந்த அதே மயில் ஆட்டத்திற்குரிய கோலத்திலிருந்த ஓர் அழகிய இளம் பெண்ணுக்கும் கரக ஆட்டம் ஆடி முடித்திருந்த ஒரு இளம்பெண்ணுக்கும் பரிசுகள் அளித்துக் கொண்டிருந்தார் கிழவன் சேதுபதி.

சேதுபதி, ரங்ககிருஷ்ணனும் அவனுடைய படைத் தலைவர்களும் உள்ளே நுழைந்ததை முதற் சில கணங்கள் தாம் கவனித்தாகவே காட்டிக் கொள்ளவில்லை. கலைஞர்களுக்கும்,