99 பாப்பைய நாயக்கர் பட்டி, மல்யை நாயக்கர் பட்டி, என்னும் ஊர்களும் சாத்தூருக்குக் கிழக்கேயுள்ள பெத்தாளு நாயக்கர் அணையும். நாயக்கர்களைக் குறுநில மன்னர்களாகக் கொண்ட சேத்தூர் ஜமீன், மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வளமான பகுதி, விஜயநகர மன்னர்களுடன் தொடர்பு கொண்டு இம்மாவட்டத்தில் வாழ்ந்த நாயுடுக் குலங்கள் பல பூபதி குலத்தைச் சேர்ந்த ஓரகண்டி, கனகய்யா நாயுடு. நாயக்கர் மன்னர் காலத்து வேல் துப்பாக்கி முதலிய போர்க்கருவிகளையும் நாயக்க வீரர்கள் வேட்டையாடிச் சேகரித்த விலங்குகளின் கொம்பு முதலியவற்றையும் அக்காலத்திய மைச்சிமிழ்கள், பாக்கு வெட்டிகள், சிக்கு வாரிகள், குறவைக்கூத்து வளை தாடிகள், வாய்கட்டு மந்திரம் - பில்லி சூனியம் பற்றிய சுவடிகள் ஆகிய வற்றைச் சேகரித்துள்ளார். விஜய வேங்கட வணங்கா முடி ஓரகண்டி கனகய்யா நாயுடு என்று கையெழுத்து இடுவார். இந்த அடைமொழி இவருடைய தொன்மை யல்பை உணர்த்தும். பிரிட்டிஷ் ஆட்சியில் நாயுடு சமூகத்தார் போலீஸ் வேலையிலும் படையிலும் சேர்ந்திருந்தனர். வேளாண்மைத் துறையில் பருத்தி, மிளகாய். சேனைக்கிழங்கு பயிரிடுவதில் இவர்கள் வல்லவர்கள். இந்திய விடுதலைக்குப் பிறகு இவர்கள் கல்வித்துறையி லும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இவர்கள் முன்னேற்றத்திற்குக் காரணமாக இருந்தவர், சிறந்த அரசியல் தலைவராகவும் இராமநாதபுர மாவட்டக் கழகத் தலைவராக இருந்த எஸ். இராமசாமி நாயுடு ஆவார்,
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/101
Appearance