101 யத்தில்தான் இவர்கள் தொகுப்பாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு இராஜுக்கள் என்றும் பெயர் உண்டு என்று சிலர் கூறுவர். இராஜாக்கள் என்பதே இவர் களுடைய சரியான பெயர் என்று சொல்பவர்கள் இவர் கள் விஜயநகர மன்னர்களின் வாரிசு என்றும் ஆகை யால் அவ்வாறு பெயர் ஏற்பட்டிருப்பதாயும் கருதுகிறார் கள். . வர்ணாச்சிரமத் தருமப்படி ராஜாக்கள் சத்திரியர். அதற்கேற்ப இவர்கள் உடற்கட்டும் வீரமும் மிக்கவர் களாக இருக்கிறார்கள். நிறையச் சாப்பிட்டுப் பலசாலி யாக இருக்க வேண்டுமென்பது இவர்களுடைய பரம் பரைக் கொள்கை. திருமணம் செய்து கொடுத்த பிறகு மருமகனுக்கு நிறையச் சாப்பாடு போட்டு அவன் பலசாலியாகும் வரை தம் வீட்டில் வைத்திருக்கும் பழக்க மும் நிகழ்கிறது. பூணூலும் அணிவர். அரசியல் விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பெருந்தலைவர்களுள் ஒருவராக விளங்கிய பூ. ச. குமார் சுவாமி ராஜா அவர்களைத் தந்தது இந்த இனம். பெற்ற சுதந்திரத்தைக் காக்கவும் இராஜபாளையம் ஏராளமான வீராகளை இந்திய இராணுவத்திறகுத் தந்திருக்கிறது. அவர்களுள் ஒருவர் ஆப்பிரிக்காவிலுள்ள காங்கோவுக்குச் சென்ற இந்தியப் படைக்குத் தலைமை தாங்கினார். பின்னர் காங்கோவிலிருந்த ஐக்கிய நாடுகள் படையின் தளபதியாகவும் புகழுடன் பணிபுரிந்தார். இவ்வாறு பெருமையடைந்தவர்தான் இப்போது இந்தி யப் படையின் தென்பிராந்தியத் தலைமைத் தளபதியாக இருக்கும் மேஜர் ஜெனரல் கே.ஏ எஸ். ராஜா அவர்கள். போர்த் தொழிலில் போல வேளாண்மைத் துறை யிலும் தொழில் துறையிலும் ராஜாக்கள் ஏற்றம்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/103
Appearance