104 ஸ்தபதிகள் கோவில் திருப்பணி வேலைகளிலும் கோபுர வேலை யிலும் சிறந்து விளங்கும் ஸ்தபதிகள், திருப்பணியாளர் களாகிய நகரத்தார்களின் ஆதரவால் பல தலை முறை களாக இம்மாவட்டத்தில் வாழ்கின்றனர். காசிமுதல் இராமேசுவரம் வரை முக்கியமான கோவில்களிலெல் லாம் இவர்களுடைய கைவண்ணத்தைக் காணலாம். கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை உருவாக்கிக் கொடுத்தவர் தேவகோட்டை ஸ்தபதி திரு.S.K.ஆச்சாரி என்பவர். சென்னை கிண்டியிலுள்ள காந்தி மண்டபத்தைக கட்டிக் கொடுத்தவர்களும் செட்டி நாட்டு ஸ்தபதிகளே. நாடெங்குமுள்ள அணைக் கட்டுக்கள் பலவற்றிலும் அவர்களுடைய கைத்திறனைக் காணலாம். கல் தச்சர்கள்: கல் வேலையிலும் கல் விக்கிரக வேலையிலும் வல்லவர் கள் பலர் இம்மாவட்டத்தில் உள்ளனர். மரத் தச்சர்கள்: நுண்ணிய மரத் தச்சர்களும் உள்ளனர். செட்டி நாட்டு வீடுகளில் இவர்களுடைய திறமையைக் காண லாம். இவர்களில் பலர் பாமாவிலும் மலாயாவிலும் சீனத் தச்சர்களுடன் சேர்ந்து தொழில் செய்திருக் கினறனர். கொத்தனார்கள்: இம்மாவட்டத்துக் கொத்தனார்களின் வேலைப் பாட்டைப் பற்றி, பொறியியல் கல்லூரிகளில் சொல்லிக் கொடுக்கிறார்கள். கோழி முட்டைகளைச் சுவர்களில் தேய்த்து முகம் பார்க்கும் கண்ணாடிபோல சுவர்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/106
Appearance