உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 நாதபுரம் வட்டத்திலும் அதனை யடுத்த கடலோரப் பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்களில் பலர் பெருஞ் செல்வராக உள்ளனர். சென்னை முதலிய மாநகரங் களில் இவர்கள் சீரிய தொழில்களை நடத்தி வரு கின்றனர். குடகுப் பகுதியில் காப்பித் தோட்டங் களில் உரிமையாளராயும் உள்ளனர். இராமநாதபுரம் வட்டத்தின் மக்கள் தொகையில் ஏறத்தாழ ஐந்தில் இரு பங்கினர் முஸ்லிம்கள் ஆவர். மண்டபம் மரக்காயர், சித்தார் கோட்டை சுல்தான், பனைக்குளம் சுல்தான் முதலிய பலரும் கீழக்கரைச் செல்வர்களும் இராமநாதபுரம் சேதுபதிகளுடன் தலை முறை தலை முறையாகக் கொண்டிருந்த நெருங்கிய உறவால் முத்துக் குளிக்கும் உரிமைகள் பெற்றுப் பெருஞ் செல்வாக்குப் பெற்றுள்ளனர். சில தீவுகளை இவர்களுக்குச் சேதுபதிகள் தானமாகவே கொடுத்து விட்டனர். அத்தீவுகளில் வாணிபம் செய்தும், மீன் பிடித்தும், தென்னை பயிரிட்டும் இவர்கள் வளமாக வாழ்கின்றனர். உப்பளத் தொழில், வளையல் ஏற்றுமதி, சங்கு விற்பனை, தங்கம் வெள்ளி வாணிகம், தோல் பதனிடுதல் இன்ன பிற துறைகளிலும் இராமநாத புரத்து முஸ்லிம்கள் புகழ் பெற்றுள்ளனர். கப்பல்கள் ஓட்டுவது, மீன் ஏற்றுமதி செய்வது, அரிய பொருள்களை வெளி நாடுகளிலிருந்துகொண்டு வருவது . சிறு கிய ஆற்றல்களும் இவர்கள்பால் மிக்குளைன. இத் தொழில்களில் இவர்களுள் முதலாளிகளும் உள்ளனர். தொழிலாளிகளும் உள்ளனர். சான்றாக, சிறு கப்பல்களை உடைமையாக உடைய மரக்கல ராயர்கள் (மரக்காயர் கள) தங்கள் கப்பலைப் பிறருக்கு வாடகைக்கு விடுவர். மரக்கலங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு எடுத் துக் கடல் வாணிகம் செய்வதிலும் மீன் பிடிப்பதிலும் .