116 துக்கு உலகக் கப்பல்கள் யாவும் வருவதற்கு வழி பிறக் கும். இதுவே சேதுசமுத்திரத் திட்டத்தின் குறிக்கோள், கால்வாயை வெட்டுவது பற்றி நிலத்திலும் கடலி லும் 1950 முதல் பொறியியல் அறிஞர்களும் கடற் படையினரும் ஆராய்ந்தனர். கடலுக்கு அடியிலிருக்கும் பாறை அவ்வளவு அவ்வளவு கனமாக இல்லையென்றும் புலனாகி யிருக்கிறது. மணல் இடம் டம் பெயருவது பற்றி அணு சக்தி நிறுவனம் ஆராய்ந்துள்ளது; மண்மேடிடுவது கால்வாயை வெட்டுவதற்குத் தடையாக இராது என்று அக்குழு கூறியிருக்கிறது. நீரியல் ஆய்வு, பருவக் காற்றுப் பற்றிய ஆய்வு ஆகியனவும் செய்யப் பெற்றுள்ளன. பிரிட்டிஷ் அரசு அனுப்பிய கேப்டன் ஜே. ஆர். டேவிஸ் என்பவர் 1960-இல் இங்கு விரிவான ஆராய்ச்சிகளைச் செய்துள்ளார். கால்வாயை வெட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் என்று கணக்கிட இந்திய அரசு ஒரு குழுவை நியமித் தது. குழுவின் தலைவர் சர்.ஏ இராமசாமி முதலியார். செயலாளர் ஆர்.ஏ.கோபாலசாமி. ஐ.சி.எஸ் இக் குழிவின் அறிக்கை 1956-இல் அரசினருக்குக் கொடுக்கப் பெற்றது. இராமேசுவரத்திலிருந்து மன்னார் வரையி லுள்ள மணற் பாறைகளை (இராமபிரான் தொடர் புடைய ஆதிசேது அல்லது Adam's Bridge) வெட்டலா மென்றும் தஞ்சை மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் என்ற திருமறைக் காட்டிலிருந்து வட இலங்கையில் யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள பருத்தித்துறை வரை (Point Calemore to Point Pedro) உள்ள மணற் பாங் கான கடற்பகுதியில் மணலைத் தோண்டி 13 மீட்டர் ஆழப்படுத்தி, பெரிய கப்பல்கள் செல்ல வகை செய்யலா மென்றும் அந்த அறிக்கை கூறியிருக்கிறது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/118
Appearance