155 பண்டலாக உருவாக்குதலும் சிவகாசியில் அன்றாடக் காட்சிகள். பட்டாசுத் தொழில்: தீபாவளி முதலிய விழா நாட்களில் வெடிச்சுட உதவுவது பட்டாசுத் தொழில். இத்தொழில் சிறு குடிசைகளில் தொடங்கி,பல இன்னல்களையும் இடை யூறுகளையும் தாண்டி வியக்கத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. சிவகாசிப் பட்டாசு இந்திய நாடெங்கும் விற்பனையாகிறது. இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் மூன்றில் இரு பங்கு சிவகாசியைச் சேரும். இத்தொழிலுக்குத் தேவை யான அலுமினியப் பவுடர் செய்ய மதுரை அருகே ஒரு தொழிற்சாலையை தீப்பெட்டித் தொழில் முதலாளிகள் நிறுவியுள்ளனர். நூற்றுக்கு மேற்பட்ட பட்டாகத் தொழிற்சலைகள் உள்ளன. இந்திய அரசுக்கு தீப்பெட்டித் தொழிற்சாலை கள் பட்டாசுத் தொழிற்சாலைகள் வாயிலாக இம் மாவட்டத்தில் பத்துக் கோடி ரூபாய் வருவாய் கிடைக் கிறது. கவின் அச்சுக்கலை : வண்ணங்கள் நிறைந்த சுவரொட்டிகள் முதலியன லித்தோ என்னும் அச்சுக்கலையின் உதவியால் அச்சிடப் பெறுகின்றன. இவ்வகை அச்சகங்கள் சிவகாசியில் 40 உள்ளன. ந்தியாவெங்கும் இந்த அச்சங்களைப் பயன் படுத்திக் கொள்கிறார்கள். கண்ணைக் கவரும் காலண்டர் கள், வியாபார லேபிள்கள், இறை உருவங்கள், அரசியல் தலைவர்கள் படங்கள், சுவரொட்டிகள், பொங்கல் வாழ்த்து தீபாவளி வாழ்த்து போன்ற அட்டைகள்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/157
Appearance