166 பிற கட்சிகளின் ஆதரவுடன் மேலும் பல இடங்களைப் பிடித்தது. 1971- இல் கூட்டணி அமைத்து தி.மு.க. நிறுத்திய எல்லா வேட்பாளர்களும் வெற்றி பெற் றனர். இம்மாவட்டத்தில் தி.மு.க.வை வளர்த்த பெருமை தேவகோட்டை திரு. இராம. வெள்ளையன், திரு.ஏ.வி.பி. ஆசைத்தம்பி,கவிஞர் கண்ணதாசன், திரு.எஸ்.எஸ். தென்னரசு ஆகியோர்க்கும் சிவகங்கையிலுள்ள பிராமணரல்லாத வழக்கறிஞர்களுக்கும் உண்டு. அமைச்சர்கள்: ம் 1936-இல் பொப்பிலி ராஜா முதலமைச்சராக இருந்த ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவையில் இம் மாவட்டத்தினரான ராஜா (அப்போது குமாரராஜா) முத்தையா செட்டியார் அமைச்சராக இருந்தார். 1937-இல் சர் கே.வி. ரெட்டி அமைத்த இடைக்கால அமைச்சரைவையிலும் இவர் அமைச்சராக இருந்தார். ராஜாஜியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி அதிகாரத் தில அமர்ந்தபோது முத்தையா செட்டியார் எதிர்க் கட்சித் தலைவரானார். . இம்மாவட்டத்தவரான. திரு.பூ.ச.குமாரசாமி ராஜா, தமிழ் நாட்டு முதல் அமைச்சராக 1949 முதல் 1952 வரை இருந்தார். அதற்கு முன் இவர் பிரகாசம் அமைச்சரவையில் 1946-47-இல் அமைச்சராக இருந் தார். முதல் அமைச்சர் பதவியை விட்டு விலகிய பிறகு இவர் ஒரிஸா மாநிலத்தின் கவர்னராக இருந்தார். 1954 முதல் 1963 வரை திரு. காமராஜ் தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக இருந்தார். அதற்கு முன் அவர் பதினைந்து ஆண்டுகள் தமிழ் நாடு
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/168
Appearance