10. விடுதலை இயக்கம் சுதந்திரப் போராட்டத்தில் முன்னின்ற தமிழகத் தில் இராமநாதபுர மாவட்டத்திற்குச் சிறப்பான பங்கு உண்டு. இம்மாவட்டத்தில் எண்ணற்ற விழுச்சியுற்ற தேசபக்தர்களும், அவர்களை எழுச்சியுறச் செய்த ஏன், தமிழகத்தையே தட்டி எழுப்பிய தென்னகத் தலைவரும் தோன்றினர். எனவே இம்மாவட்டம் ஆங்கிலேயர் களால் புறக்கணிக்கப்பட்டது; குறுநில மன்னர்களுக்குப் பிரிக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் பெரும்பான்மை யான மக்கள் குற்ற பரம்பரையினர் என ஒதுக்கி வைக் கப்பட்டனர். அடிமைத் தளைகளை எதிர்த்து, விட்டுக் கொடுக்காத வீரமிக்க போர்புரிந்ததால்! இங்ஙனம் எல்லாத் துறைகளிலுமே தள்ளி வைக்கப்பட்டது இந்த மாவட்டம். மருது சகோதரர்கள்: 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிவகங்கைச் சீமை யைப் பெரியமருது, சின்னமருது என்ற இரண்டு சகோத ரர்கள் தமிழ் மணம், தெய்வநெறி, தேசிய வெறி, நிறைந்த இலட்சிய வாழ்க்கை மூலம் ஆட்சி நடத்தினர். அவர்கள் ஆங்கில ஏகாதிபத்திய வெறியர்களை எதிர்த்து காளையார்கோவிலில் போராடினர். அப்போரில் ராணி வேலுநாச்சியம்மையார் காட்டிய வீர உணர்ச்சி தமிழ் மக்களின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்கது. வடநாட்டில் ஜான்சி ராணி என் னும் வீரமங்கை தோன்றுவதற்கு 50 ஆண்டுகளுக்கு .
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/175
Appearance