183 புகழ் அடைந்தது. காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை,பூலாங்குறிச்சி ஆகிய இடங்களில் நடை பெற்ற கிளர்ச்சிகளில் போலீசார் சுட்டுப் பலர் உயிரிழந்தனர். தேவகோட்டையில் நீதி மன்றக் கட்டிடத்தில் தீ வைக்கப்பட்டது. திருவாடானையில் ஏராளமான அரசாங்க அலுவலகங்கள் தீயிடப்பட்டன, கருவூலம் உடைக்கப்பட்டது. நடராஜபுரம் இரயில் நிலையம் மண்ணோடு மணணாயிற்று. பூலாங்குறிச்சி அஞ்சல்நிலையமும் தபால் பைகள் வந்த பஸ்ஸும் கொள்ளையடிக்கப்பட்டன. மலைமீதேறி வந்தேமாதரம் என்று முழங்கியவர்களை, இயந்திரச்சுழல் துப்பாக்கியால் போலீசார் சுட்டனர். பல இடங்களில் தபால் தந்தி ரயில் போக்குவரத்து யாவும் தடைப்பட்டது. பாலங்கள் உடைக்கப்பட்டன. அரசாங்க அலுவலர்கள் அச்சுறுத் தப்பட்டனர். இரண்டு லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் தண்ட வரியாக அரசாங்கத்தாரால் இந்த மாவட் டத்தில் வசூலிக்கப்பட்டது. தேசியத் தலைவர்கள் வீடு களைப் போலீசார் சூறையாடினர். ராஜபாளையத்தில் தொண்டர்கள் கேவலப்படுத்தப்பட்டனர். . 1942 இயக்கத்தில் உருவான இளைஞர்களுள் ஒருவர் "தமிழ் ஹரிஜன்" ஆசிரியராக இருந்தவரும் நகைச் சுவை நிறைந்த சொற்பொழிவாளருமான திரு. சின்ன அண்ணாமலை. கடல் கடந்த நாடுகள்: இந்தியாவுக்கு வெளியே வாழ்ந்த தமிழர், தேசிய இயக்கத்துக்கு எப்போதும் பெரிதும் உதவி செய்து வந்திருக்கிறார்கள். இந்தப் புனிதமான கடமையில் இராமநாதபுர மாவட்டத்தார் முன்னணியில் இருந்து வந்திருக்கிறார்கள்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/185
Appearance