உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 கடைசியாகக் குறிப்பிட்ட மு. இராகவ ஐயங்கார் சேது நாடும் தமிழும்' என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூலில் சேதுபதிகளின் தமிழ்த்தொண்டு விவரமாகக் கூறப் பெற்றிருக்கிறது. சேதுபதிகள் குடும்பத்தில் ஒருவர் பொன்னுச் சாமித் தேவர், சேதுநாடான இராமநாதபுரச் சீமையின் மேலாளராக இருந்து, அந்நாட்டை வளமுறச் செய் தவர்; அருங்கலை வினோதர்; திருந்திய செந்தமிழ் நாவலர்; பெருங்கொடை வள்ளல். இவருக்குப் பிறந்த செல்வ மக்களுள் மூன்றாமவர் பாண்டித்துரைத் தேவ ராவர். "பேச்சிலே பெரியசாமி பெருமையிலே சீமைச்சாமி அழகிலே பாண்டித்துரை அமைந்தார் பொன்னுச்சாமி மக்கள் "" என்னும் நாட்டுப் பாடல் பொன்னுச்சாமி தேவருக்குப் பிறந்த புதல்வர் மூவரையும் பாராட்டியிருப்பதைக் காணலாம். பாண்டித்துரைத் தேவர், நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் 1901-இல் நிறுவினார்.1971 முதல் இச்சங்கத்தின் தலைவராக இராமநாத சேதுபதி இருந்து வருகிறார். சிவகங்கை அரசர்கள்: மருது பாண்டியர்கள் பல தமிழ்ப் புலவர்களை ஆதரித்தார்கள். அவர்களுடைய அவையில் 21 புலவர் கள் இருந்தனர் என்பர். மருது அரசர் விருப்பப்படியே சாந்துப்புலவர் 'மயூரகிரிக்கோவை' பாடினார்.