194 கம்பர் சமாதி நாட்டரசன் கோட்டையில் இருக் கிறது, கம்பன் காவியத்தை எரிக்க காவியத்தை எரிக்க வேண்டுமெனக் கிளர்ச்சி நடந்துங்கூட, அதை நிலைநாட்டி இந்துக்கள் அல்லாத பிற சமயத்தாரும் அந்த இலக்கியத்தைப் பயிலவும் பாராட்டவும் செய்த பெருமை காரைக்குடி கம்பன் கழகத்துக்கு உண்டு, காரைக்குடி கம்பனூர் என்னும் ஊர் இருக்கிறது. அருகே இராசசிங்கமங்கலத்துக்கு அருகே ஒட்டக்கூத்தர் பிறந்த மலரி இருக்கிறது. இவ்வூரில் புகழ் பெற்ற காளி கோவில் ஒன்று இருக்கிறது. 'காளி ஒட்டக் கூத்தன்' என்ற வழக்கு உண்டு. கீழக்கரை உமறுப் புலவர் 17-ஆம் நூற்றாண்டில் அத்தர் வியாபாரிகளின் குடும்பத்தில் பிறந்தார். இவர் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளும் கலந்த சீறாப்புராணம் என்னும் நூலைச் செய்தார்; அன்றியும் நொண்டி நாடகங்கள், முதுமொழிமாலை என் னும் நூல்களையும் இயற்றினார்; இவரது கல்லறை எட்டைய புரத்தின் தென்கோடியில் உள்ளது. ஆசாரக்கோவை ஆக்கிய புலவர் முள்ளியார் பிறந்த பெருவாயில் என்ற ஊர், தேவிபட்டினத்திற்கு அருகே உளது. மழவராயனேந்தலில் பிறந்த மழவை மகாலிங்க ஐயர் மாகவித்துவான் காஞ்சிபுரம் சபாபதி முதலியா ருடன் நட்புள்ளவர். தொல்காப்பியம் எழுத்ததிகாரத் தைநச்சினார்க்கினியர் உரையுடன் 1847-இல் சென்னையில் அச்சிற் பதிப்பித்தார். அருணாசல புராணத்திற்கு உரை எழுதினார். இலக்கணச் சுருக்கம் என்னும் 1879-ஆம் ஆண்டில் வெளியிட்டார், நூலை
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/196
Appearance