உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. கல்வி நிலை இம்மாவட்டம், இந்திய விடுதலைக்குப் பின்னரே கல்வித்துறையில் வளர்ச்சி பெற்று வருகிறது. 1947க்கு முன்பு இம்மாவட்டத்தில் கல்வி பெறவேண்டுமென்று விரும்பியவர்கள் மிகக்குறைவு அவ்வ று விரும்பியவர் கள் வெளிமாவட்டங்களிலும் இலங்கையிலும் ஏனைய வெளிநாடுகளிலுமே கல்வி சுற்று வந்தனர். கல்வித் துறையில் இராமநாதபுரம் பிற்பட்ட மாவட்டமாக இருந்ததால் மருத்துவக் கல்லூரியிலும் பொறியியல் கல்லூரியிலும் இடம்பெற இராமநாதபுர மாவட்டத்திலிருந்து ஒரு சில மாணவர் மட்டுமே மனுச் செய்தனர். எனவே தஞ்சை,சென்னை,திருநெல்வேலி போன்று கல்வித்துறையில் முன்னேற்ற மடைந்த மாவட்டத்து மாணவர்கள், இடம் பெறுவதற்காக தங்களை இராமநாதபுர மாவட்டத்தார் என்று மனுக் களில் குறிப்பிட்டு வந்தனர். தொடக்கக் கல்வி: காமராஜ் ஆட்சியில் தொடக்கக் கவ்வி மாநில மெங்கும் பெரிதும் பரவிற்று. பிற மாவட்டங்களை நோக்க இன்னும் இம்மாவட்டத்தில் தொடக்கக் கல்வி போதிய வளர்ச்சியடையவில்லை. பிற்பட்ட சமூகங் களைச் சேர்ந்த மாணவர்கள் பகல் உணவுத் திட்டம் ஏற்பட்டுங்கூட, முறையாகப் பள்ளிக்குச் செல்வதில்லை. வேளாண்மை வேலை நடைபெறாத நாட்களில் மட்டுமே அவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.