20 இந்த ஆறு இராமநாதபுர மாவட்டத்தை இரு பிரிவுகளாகப் பிரிக்கிறது. திருப்பூவணம் என்னும் தலமும், மானா மதுரை என்னும் சிறு நகரும் இவ்வாற் றின் கரையில் இருக்கின்றன. பரமக்குடியும், எமனேசு வரமும் வைகைக் கரையில் எதிர் எதிரே அமைந் துள்ளன. வைகை ஆற்றின் குறுக்கே விரகனூர் அருகே யும் பார்த்திபனூர் அருகேயும் சிறு அணைகளும், மானா மதுரையிலும் பரமக்குடியிலும் பெரிய பாலங்களும் இம்மாவட்டத்தில் கட்டப் பெற்றுள்ளன. குண்டாறு : இது மேற்குத் தொடர்ச்சி மலையில் உண்டாகிறது. அருப்புக் கோட்டை, முதுகுளத்தூர் வட்டங்களின் வழியாக ஓடி மன்னார் வளைகுடாவில் கீழக் கரைக்கு அருகே கடலுடன் கலக்கிறது. இவ்வாற்றின் குறுக்கே கமுதிக்கு அருகே சிறு அணை ஒன்று கட்டப் பெற்றிருருக்கிறது. விரிசலையாறு : இது மதுரை மாவட்டத்தில் தோன்றி திருப்பத்தூர், திருவாடானை வட்டங்களின் வழியாக ஓடி வங்காளக் குடாக்கடலில் கலக்கிறது. இவ்வாற்றுக்கு வீரசுழி என்றும் பெயர் உண்டு. இதன் கிளை பாம்பாறு. விரிசலையாற்றின் குறுக்கே, தேவகோட்டைக்குத் தென் மேற்கேயுள்ள எழுவன் கோட்டை யருகே 1964 அளவில் ஓர் அணை கட்டப்பெற்றுள்ளது. வைப்பாறு : இது, திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி, ஸ்ரீவில்லி புத்தூர், சாத்தூர் வட்டங்களின் வழியாக மீண்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் நுழைந்து மன்னார் வளைகுடாவில் கலக்கிறது. அர்ச்சுனா ஆறு: இது மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி சாத்தூர் வட்டத்தின் வழியாக ஓடி.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/22
Appearance