உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 நன்கொடைகள் குவிந்தன. அருப்புக் கோட்டைச் சாலையில் வானுயர பல கட்டிடங்கள் எழுந்தன. 2,600 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். நிர்வாகி களின் விடாமுயற்சியால் இக்கல்லூரி விரிந்து வளர்ச்சி அடைகிறது. கீழ்க்கண்ட வகுப்புக்கள் உள்ளன: புகுமுக வகுப்பு: பி.ஏ ; பி.எஸ்.சி; பி.காம். எம்.எஸ்ஸி; (கெமிஸ்டிரி), பிஎச்.டி. (கெமிஸ்டிரி). இராஜா துரைசிங்கம் நினைவுக் கல்லூரி சிவகங்கை இக்கல்லூரி 1947-இல் சிவகங்கை அரசர் சண்முக ராஜாவால் அவர் தந்தையார் நினைவாகத் தொடங்கப் பெற்றது. மானாமதுரைச் சாலையில் கட்டிடங்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. சிவகங்கை அரசரைத் தலைவராகக் கொண்ட ஒரு குழு அன்றாட அலுவல்களைக் கவனித்து வருகிறது. ஜமீன் ஒழிப்பு நிதியிலிருந்தும் தேவஸ்தான நிதியிலிருந்தும் கல்லூரி நடைபெறுகிறது புகுமுக வகுப்பு: பி.ஏ ; பி.எஸ்ஸி., வகுப்புக்கள் நடை பெறுகின்றன. அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி சிவகாசி சிவகாசியின் தொழில் தந்தை அய்ய நாடார் 1963-இல் இக்கல்லூரியைத் தொடங்கினார். ஸ்ரீவில்லி புத்தூர் சாலையில் மாடமாளிகைகளாக அழகிய கட்டி டங்கள் கட்டப் பெற்றுள்ளள. 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் பயில்கிறார்கள். புகுமுக வகுப்பு: பி.ஏ, பி.எஸ்சி; பி காம்; காந்தியக் கொள்கைகள் பற்றிய படிப்பு ஆகியவை இங்கு கற்பிக்கப்படுகின்றன.