224 மின்சாரப் பொறியியல் துறைகளில் பட்டப்படிப்புக்கு இங்கு பயிற்றுவிக்கப்படுகிறது. ஆய்வுக் கூடங்களும் தொழிற்கூடங்களும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. பலஉணவு விடுதிகள் கட்டப் பட்டுள்ளன. ஐந்து வகுப்புக்களிலுமாக 700 பேர் பயிலுகின்றனர். 1952-இல் வள்ளல் அழகப்பரால் தொடங்கப்பெற்ற இக்கல்லூரி 1969முதல் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. Electronics and Communication என்ற பொறியியல் பிரிவு 1970இல் தொடங்கப் பெற்றிருக் கிறது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி டாக்டர் அழகப்ப செட்டியார் ஆசிரியர் கல்லூரி அழகப்பாபுரம், காரைக்குடி-3 (Dr. Alagappa Chettiar Training College) இக்கல்லூரியில் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பி. ட்டி., படிக்க வசதி செய்யப்பெற்றிருக்கிறது ஆடவர் 70 பேரும் பெண்டிர் 30 பேரும் ஆண்டுதோறும் சேர்த்துக்கொள்ளப் பெறுகின்றனர். உணவு விடுதிகள் உள்ளன. கம் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பெள அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களைச் சிறப்பாகப் பயில இங்கு வாய்ப்பு உண்டு. நன்முறை உயர்நிலைப் பள்ளி, இக்கல்லூரியின் உறுப்பாக நடைபெற்று வருகின்றது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/226
Appearance