255 மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்: இதில் பெரிய தண்டபாணி, வல்லப விநாயகர் உருவங்கள் உள்ளன. முத்துராமலிங்க சுவாமி கோவில்; ஊரின் கிழக்குப் பகுதியில் வெளிப்பட்டினத்தில் உள்ளது. கோட்டை வாசல் பிள்ளையார் கோவில். தாயுமான சுவாமி கோவில் கடைசி காலத்தில் தாயுமானவர் அவருடைய இங்கே இருந்ததாக கூறுவர். லெட்சுமி புரத்தில் அவருடைய சமாதி இருக்கிறது. 1581-இல் தாயுமான சுவாமி பரிபூரணம் அடைந்ததாக அதில் குறிப்பிடப் பெற்றிருக்கிறது. லெட்சுமி அம்மாள் என்பவர் இச்சமாதிக்கு அருகே ஊரணி வெட்டி படித்துறை அமைத்ததால் இப்பகுதிக்கு லெட்சுமிபுரம் என்று பெயர் ஏற்பட்டிருக்கிறது. இக்கோவில் நெடுங்காலம் துறவிகள் கையில் சிக்கிக் கிடந்த பின், தாயுமானசுவாமி சன்மார்க்க சங்கத்தின் ஆட்சியில் இருந்துவருகிறது. இப்போதைய சேதுபதி சுற்றுச்சுவர் கட்டிக் கொடுத்திருக்கிறார். தைமாதம் குருபூஜை நடைபெறுகிறது. திருப்பனந்தாள் ஆதீனத் தார் இங்கு ஒரு நூல்நிலையத்தை நடத்தி வருகின்றனர். இராமலிங்க விலாசம் இம்மாளிகையில் இராமநாதபுரம் சீமைக்கும் தஞ்சைச் சீமைக்கும் நடந்த போர்க் காட்சிகள் வண்ண ஒவியமாகத் தீட்டப் பெற்றிருக்கின்றன. காமலீலைகளின் ஓவியங்களும் உள்ளன. 64 ரீஇராமபிரானால் முதல் சேதுபதிக்கு மகுடம் சூட்டப்பெற்ற போது குகசேதுபதி அமர்ந்திருந்த கல் இங்கே இருக்கிறது. நேபாளம், பூட்டான், மைசூர்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/257
Appearance