258 போகம் விளைகிறது. பிற பகுதிகளில் கம்பு, கேப்பை கேழ்வரகு, சோளம், மிளகாய், மல்லி, கொற்றமல்லி பயிரிடப்படுகின்றன. சில ஊர்களில் மா, எலுமிச்சை, பலாத் தோட்டங்கள் உள்ளன. ஈக்கி நாரைக் கொண்டு பாய் மிடைதல் இங்கு ஒரு பெரிய தொழில். தேவிபட்டினத்தில் மீன்பிடி தொழில் நடைபெறுகிறது. பல ஆண்டுகளில், தீபாவளிச் சமயம் புயல் காற்று அடிக்கிறது. பிசிர்குடி: இவ்வூர் இராமநாதபுரத்துக்கு அருகே இருக்கிறது. பிசிராந்தையார் இவ்வூரினர் என்பர். புல்லாங்குடி: இது காஞ்சி காமகோடி மடத்துக்கு உரிய ஊர்களுள் ஒன்று. பெருவயல்: தேவகோட்டை - தேவிபட்டினம் சாலை யில் இருக்கிறது. இங்குள்ள முருகன் கோவிலே, அருண கிரிநாதர் பாடல் பெற்ற வயலூர் என்பது சிலர் கருத்து. சித்தார் கோட்டை : இராமநாதபுரத்திலிருந்து 7 மைல் தொலைவிலுள்ள சிற்றூர். பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழும் ஊர் பனையோலையால் பாய், குல்லா, கைப்பை ஆகியவற்றை அழகுபடச் செய்து இவ்வூரார் வெளி நாடு களுக்கு விற்கின்றனர். சூரங்கோட்டை: இவ்வூரைச் அவன் சேர்ந்த முதுநா என்னும் சிற்றூரில் வண்ணான் ஒருவன் துணி துவைக்கும் போது, துவைத்துக் கொண்டிருந்த கல்லில் உளியின் ஒலி கேட்டதாகவும், விநாயகர் உருவம் இயற்கையாக உண்டானதாகவும் கூறுகிறார்கள். தேவிபட்டினம் : இராமநாதபுரத்துக்கு வட கிழக்கே 15 கி.மீ. தொலைவில் கடற்கரையிலுள்ள சிற்றூர். இவ்வழியாய் தேவகோட்டைக்குச் செல்லலாம்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/260
Appearance