ஊராட்சி மன்றங்கள்: களரி 263 இவ் வூ உத்தரகோச மங்கைக்கு அருகே இருக்கிறது. களரிக் கண்மாய் மூன்று மைல் சுற்றள வினது. பழந்தமிழர் இசை நூலின் ஒன்றின் பெயர் களரியாவிறை சேதுக்கரை: இவ்வூருக்கு ஆதிசேதுக்கரை என்றும் பெயர் உண்டு. சுவையான இளநீராலும் இராமர் கட்டிய அணையாலும் இவ்வூர் புகழ் பெற்றது. இக்கடற் பகுதிசகு ரத்னாகரம் என்றும் அதற்கு அப்பாலுள்ள பகுதிக்கு மகோததி என்றும் பெயர். இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் இராம பிரான் கட்டிய அணையின் பகுதிகள் கடலுக்குள் இருப்ப தாகச் சொல்லுகிறார்கள். திருப்புல்லணைக்கும் சேதுக்கரைக்கும் இடையே அகத்தியர் கோவில் ஒன்று இருக்கிறது. விக்கிரகத்தின் மேல் பகுதி வெண்மையாயும் கீழ்ப் பகுதி கறுப்பாயும் இருக்கிறது. திரு உத்தரகோச மங்கை 'கடவுளுக்கு ஊர் எது?' என்ற வினாவுக்கு விடை யாக, உத்தரகோச மங்கையே என்று மாணிக்க வாசகர் விடை கூறுகிறார். அடியார்களெல்லாம், சிவபுரம் போலப் போற்றும் ஊர்' என்றும் அவர் கூறுகிறார். 38 இடங்களில் திருஉத்தரகோச மங்கையை மாணிக்க வாசகர் பாடியுள்ளார். நீத்தல் விண்ணப்பத்தில் இருபது பாடல்கள் 'உத்தரகோச மங்கைக்கு அரசே என முடிகின்றன.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/265
Appearance