267 காக இதை எப்போதும் சந்தனக்காப்பிட்டு வைத்திருக் கிறார்கள். ஆண்டுக்கு ஒருநாள் ஆருத்ரா தரிசனத் தன்று மட்டும் பழைய மெய்ப்பூச்சைக் காலை 10 மணிக் குத் தொடங்கி பகல் 2 மணி வரை களைவர். பிறகு அபிஷேகம் செய்கிறார்கள். இரவு 8 மணி வரை அடியார் கள், திருமேனியைக் கண்டு களிக்கலாம். இந்நேரத்தில் மட்டுமே மரகதத்தின் திருமேனியை வழிபடும் வாய்ப்பு நல்கப்படுகிறது. பிறகு குருக்கள் பதின்மர் இருந்து அறவைச் சந்தனத்தைப் பூசுகின்றனர். இரவு 2 மணி அளவில் சந்தனக் காப்பிட்டு முடிந்ததும் முதலில் பசுவுக்கும் பின்னர் கன்னிப் பெண்ணுக்கும் பிறகு வேதகனபாடிகளுக்கும் சேதுபதி அரசருக்கும் அதற்கப்புறம் ஏனைய அடியார்களுக்கும் மரகத நடராசர் காட்சி கொடுக்கிறார். அதன் மரகத நடராசர் திருவுருவம் செய்வதற்கு உரிய மரகதம், சேதுசமுத்திரத்தில் கிடைத்திருக்கக் கூடும். இக் கடலில் மைனாக பர்வதம், ரத்னாகரம் என்ற பகுதி கள் இருப்பதாயும் ஐதீகம். சீதக்காதி வள்ளலுக்கு இந்தப் பாறை அகப்பட்டதாகவும் ஒரு கப்பல் அளவு வெட்டிக்கொண்டு வந்தார் என்றும் அவற்றைக் கீழக் கரைக் கடற்கரையில் வைத்திருந்தபோது பேரொளி யாக அவை ஒளி வீசின என்றும் கூறுவர். தாய்லந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் புத்தருக்கு மரகதத் திருமேனி இருக்கிறது. அதன் உயரம் ஓர் அடிதான். நூற்றுக் கணக்கான விளக்கு களின் ஒளி அதன்மீது விழ செய்கிறார்கள். அந்த உருவத் திற்கு அபிஷேகம் கிடையாது. இம்மாவட்டத்திலுள்ள நகரத்தாரிடம் மரசுத் விநாயகர் இருந்ததாயும் அவ்விக்கிரகம் இப்போது
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/269
Appearance