உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 கண் மோட்டார்க்காரின் 'ஹெட்லைட்' போன்ற விழிகளையுடைய மீனும் கணவாய் (Sapio) மீனும், கூரிய முள் உடைய ஆவிலியா மீனும் இங்கு பிடிபடுகின்றன. நல்லிருக்கை : இவ்வூரின் பெயர் கூர்ந்து கவனிக்கத் தக்கது. சேதுபதிகள் கட்டிய கோவில் ஒன்று இங்கு இருக்கிறது. முத்துப்பேட்டை: உச்சிப்புளிக்கு அருகு இங்கு ஒரு கத்தோலிக்கத் தேவாலயம் இருக்கிறது. மண்டபம் ஊராட்சி ஒன்றியம் இது 115 சதுர மைல் பரப்புடையது. தமிழ் நாட்டிலேயே மிகவும் பிற்பட்ட ஒன்றியமென்று இதைக் குறிப்பிடலாம். தீவுப் பகுதிகளும், அவற்றில் காடுகளும் உடை, பனை, தென்னை,முந்திரிப் பயிர்களும் கொண்டது. பட்டனம்காத்தான்,பனைக்குளம், அழகன் குளம், புதுமடம், ரெட்டை ஊரணி ஆகிய ஊர்களில் நெல்லும் ஏனைய ஊர்களில் புன்செய்த் தானியங்களும் பயிரிடப்படுகின்றன. தீவுப்பகுதியின் விளைபொருள்கள் புளி, தேங்காய், சீனாவுக்கு சிங்கப்பூர் வழியாக ஏற்று மதியாகும் கடல் அட்டை (Sea- Slugs) . கீழக்கரையில் ஜிப்சமும் இந்த ஒன்றியத்தில் சுண்ணாம்புக்கல்லும் இருந்தும் சிமிண்டு ஆலை அமைக்க முடியாதிருப்பதை இந்நூலின் பிறிதொரு பகுதியில் குறிப்பிட்டிருக்கிறோம். தீவுப்பகுதியின் இறக்குமதி: உணவுப் பொருள்; குடிதண்ணீர், இராமேசுவரம் கோவிலுக்கு அபிஷேகத் திற்கு கங்கை நீர். தீவுப் பகுதியின் போக்குவரத்து: படகு, ஜீப், மாட்டு வண்டி.