284 நெடுங்காலமாகவே கடல் அரிப்பு இங்கு ஒரு பிரச்சினையாக இருந்திருக்கிறது. கடலுக்குள் ஒரு தடுப்புச் சுவர் கட்டவேண்டும் மென்றும் துறை முகப் பலத்தையும் இரயில் நிலையத்தையும் 5கி.மீ. மேற்கேயுள்ள அரியாங்குண்டு என்ற இடத்துக்கு மாற்ற வேண்டுமென்றும் யோசிக்கப்பட்டது. 1964-இல் துறை முகப்பாலத்தையும் இரயில் நிலையத்தையும் பெரும் பகுதியையும் கடல் கொண்டு விட்டது. ஊரின் இலங்கையர் கப்பலில் இங்கு வந்து இறங்கியதும் இங்கு பேசப்படும் தமிழ் மொழி புரியாமல் அல்லற் பட்டனர். ஈழத்தமிழ் இங்குள்ளவர்களுக்கு மயக்கம் தந்தது. அந்நாளில் நிகழ்ந்த ஒரு சுவையான உரை யாடலைக் குறிப்பிடலாம். கப்பலிலிருந்து வந்திறங்கிய யாழ்ப்பாணத்தார் :(பசியுடன்) சோறு எங்கே விற்கும்? இரயில்வே கூலி: சோறு, தொண்டையில் விக்கும். இராமேசுவரம் நகரியம் தீவைப்பற்றிய பொதுக் குறிப்புக்கள் இராமேசுவரம் தீவு ஒரு குறுகிய கடலால் பிரிக்கப் பட்டு இந்திய நாட்டின் தென்கோடியில் இருக்கிறது. இராமாவதாரம் எடுத்த விஷ்ணுவின் கைகளிலுள்ள இரண்டு ஆயுதங்களில் ஒன்றான சங்கு போன்ற வடிவத் தில் இத்தீவு அமைந்திருக்கிறது. தீவின் நீளம் 15மைல். இதில் 8 மைல் நீளத்துக்கு மட்டும் இந்தத் தீவு 6 மைல் அளவு அகலமாக இருக்கிறது. எஞ்சிய 9 மைல் நீளத் துக்கு தீவின் அகலம் ஒருமைல்தான்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/286
Appearance