திருமாலுகந்தான் கோட்டை : 311 பெரு நாளிக்கும் சாயல்குடிக்கும் இடைப்பட்ட இவ்வூரில் சேதுபதிகள் கட்டிய சிவன் கோவிலிருக்கிறது. கமுதி ஊராட்சி ஒன்றியம் இவ்வொன்றியத்தில் முதுகுளத்தூர் வட்டத்தின் பெரு நகரான கமுதியிருக்கிறது. கமுதியும் அபிராமமும் பேரூராட்சி உள்ள ஊர்கள். இவை தவிர 54 ஊர்கள் உள்ளன. பல ஊர்களின் பெயர்கள் இயற்கை வளத்தை யும், கோட்டை முதலியன இருந்த வரலாற்றையும் நீர் வளத்தையும், இசைத் தொடர்பையும், பல சமூகங் களின் உறவையும் குறிப்பன. அவையாவன: ஆனையூர், பாப்பு ரெட்டிய பட்டி, பாப்பான் குளம். இடையன் குளம், நகரத்தார் குறிச்சி, கீழமுடி மன்னார் கோட்டை, மேலமுடி மன்னார் கோட்டை, புதுக் கோட்டை, மாவிலங்கை, பாக்கு வெட்டி, எருமைக்குளம், கு இடிவிலகி,கொம்பூதி முதலியன. கமுதி: இந்நகர் மதுரையிலிருந்து 52 மைல் தொலை விலும் அருப்புக் கோட்டையிலிருந்தும் மானா மதுரை யிலிருந்தும் 24 மைல் தொலைவிலும் உள்ளது. கடற்கரை ங்கிருந்து 21 மைல். முதுகுளத்தூர் 12 மைல் குண்டாற்றின் தென்கரையில் இவ்வூர் அமைந்திருக் கிறது. இந்த ஆற்றின்மீது 1957-இல் ஒரு ரெகுலேட்டர் கட்டப்பெற்று வேளாண்மைக்குத் தண்ணீரைப் பாய்ச்ச வும் எஞ்சிய நீரை மலட்டாறு வழியாக கடலுக்கும் திருப்பிவிடப் பட்டிருக்கிறது. இவ்வூர்க் கோட்டை புகழ் பெற்றது. திரு உடையப்பத் தேவர் என்ற சேதுபதி இதை பிரஞ்சுப்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/313
Appearance