819 ஜமீன் 32 ஆண்டுகளுக்கு ஐரோப்பியத் துரைமார்களிடம் ஒப்புவிக்கப்பட்டது. இந்த வழக்கில் சில விசாரணைகள் செய்வதற்காக. சிவகங்கையிலேயே நீதி மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்தியாவிலுள்ள ஜமீன்களில் பட்டத்து உரிமை முறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றிய பொதுவான சட்டதிட்டங்கள், சிவ கங்கை வழக்கில்தான் பிரிவி கவுன்சிலால் வரையறை செய்யப் பெற்றன. பாமரர் இலக்கியங்களில் சிவகங்கை வரலாறு பதியப்பட்டிருக்கிறது, சிவகங்கைச் சரித்திரக் கும்மி, முத்துச்சாமி என்பவரால் கும்மிபோல சந்தத்துடன் படிக்கும்படி சாதாரண நடையில் எழுதப்பட்டிருக் கிறது. முருகேசன் என்ற முருகப்பன் இயற்றிய சிவகங்கைச் சரித்திர அம்மானை என்ற அம்மானை நூலும் வெளிவந்திருக்கிறது. இந்நூலுக்கு கும் பெனியார் அம்மானை என்ற பெயரும் உண்டு. சிவகங்கைச் சீமையின் வரலாறு, கவியரசு கண்ண தாசனால், ல், 1962-ஆம் ஆண்டளவில் திரைப்படமாக் கப்பட்டது. . பேராசிரியர் ந. சஞ்சீவி மருதிருவர் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் படைத் திருக்கிறார். இனி சிவகங்கை சிவ சிவகங்கை வட்டத்தைக் காண்போம். கங்கை நகராண்மைக் கழகமும் சிவகங்கை, காளையார் கோவில், மானாமதுரை, திருப்பூவணம் ஆகிய நான்கு ஒன்றியங்களும் அடங்கியது இவ்வட்டம். சிவகங்கை நகரம் : . 1964-இல் இங்கு நகராண்மைக் கழகம் ஏற்பட்டது. கோட்ட ஆட்சித் தலைநகராகவும் இருந்து வருகிறது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/321
Appearance