326 துச் செய்ய விரும்பியும், புதிதாக ஒரு ராஜகோபுரம் அமைத்தார். இதுவே சோமேசர் கோயில் முன்பாக வானளாவு அமைந்து, மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய மருது அரசர்' என்று கூறுமாறு அவர் புகழ் இனறும் எனறும் நிறுை நிலவச் செய்து வருகிறது. காளையார் கோயில் கோபுரத்தின் மீதேறி சிறந்த தொலை நோக்கி (Telescope with Powerful Lense) வைத்துப் பார்த்தால் மதுரைக் கோபுரம் தெரியும். இதற்கென மானாமதுரையிலிருந்து இவ்வூர் வரை 12 பைல் தொலைவுக்கு வண்டி முதலிய வாகனங்கள் வைக்காமல் வழி நெடுக மக்களை நிறுத்தி வைத்துக் கைச் செங்கலாகச் செங்கல்கள் மானாமதுரையிலிருந்து காளையார் கோவிலுக்கு வந்தன. ரஷ்யாவிலும் சீனா விலும் சில அணைகள் கட்ட இயந்திரத்தைப் பயன்படுத் தாமல் இவ்வாறே மக்களிடம் வேலை வாங்கப்பட்டிருப் பதும் குறிப்பிடத் தக்கது. இக்கோபுரத்தின் உயரம் 157 அடி. மதுரையில் மிக உயர்ந்த கோபுரத்தின் உயரம் 151 அடிதான். மூன்று கோவில்கள் ஒரே கோட்டை மதிலுக்குள் நக்கும் காட்சியை வேறு எங்குமே காண இயலாது. இக்கோவில் சொத்துக்கள் யாவும் காளீசர் பெயரால் உள்ளன. திருவிழாககள் சோமேசர்க்கு மட்டுமே நிகழ் கிறைன. சுந்தரேசரும் மீனாட்சியும் மதுரையில் எவ் வளவுதான் பகட்டாக இருந்தாலும் இங்கு ஒதுக்குப் புறத்தில் தவம் செய்தவண்ணமாக, அடக்கமாக இருக் கிறார்கள். இதனால் காளைதேட, சொக்கர் சுகிக்க, சோமேசர் அழிக்க' என்ற பழமொழி வழங்கி வருகிறது. . இங்கு சோமாஸ்கந்தரின் திருவுருவமும், அருண கிரிநாதா திருப்புகழ் பெற்ற முருகனின் திருக்கோல
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/328
Appearance