உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 சிவகங்கை அரசரின் ஆளுகையில் இருந்ததால் இப்பகுதியில் வேதமறிந்த பிராமணக் குடும்பங்கள் வாழ்கின்றன. வைகையின் மேல் கரையில் பஸ்நிலைய மும் இரயில் சந்திப்பும் கடைவீதிகளும் ஆனந்தவல்லி அம்பாள் கோவிலும் கீழ்க்கரையில் பல வீடுகளும் விஷ்ணுகோவிலும் உள்ளன. கிறித்தவ சமயமும் இங்கு பரவியிருக்கிறது. களிமண் பெரிய அளவில் பரவிக்கிடப்ப தால் அதைப்பயன்படுத்தி மண்பாண்டம், ஓடு. செங்கல் கியவை செய்யப்படுகின்றன. இத்தொழில்கள் இங்கு ஏற்றம் பெற்றுள. மானாமதுரைக் குடங்களும் (கடம்) கடங்களும் புகழ்பெற்றவை. வெண்கலப்பாத்திரங் களும் இங்கு செய்யப்படுகின்றன. சிமிண்டுக்குழாய் செய்யும் தொழிற்சாலையும் நூலாலையும் நடைபெற்று வருகின்றன. ஊமை - செவிடர் பள்ளியும், தாயாபுரத்தில் குட்ட நோய் நிலையமும் உள்ளன. கத்தோலிக்கர், முஸ்லிம்கள் ஆகியோரும் இங்கு தொகையாக வாழ்கின்றனர். இடைக்காட்டூர் : மானாமதுரையிலிருந்து ஒன்பது கி.மீ., சிவகங்கையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் வைகையின் வடகரையில் அமைந்தது. இடையர்கள் வாழ்ந்த காட்டூர் ஆதலின் இவ்வாறு பெயர் பெற்றது. பதினெட்டுச் சித்தருள் ஒருவரான இடைக்காடர் வாழ்ந்த பகுதி இது. எனவே பழமையானது. கிரகக் கோவில் ஒன்று இருக்கிறது. நெல்,கரும்பு. வாழை வெற்றிலைக் கொடிக்கால் பயிரிடப் படுகின்றன. நவக் வேம்பத்தூர்: பரமக்குடிச்சாலையில் மானாமதுரை யிலிருந்து 16 கி.மீ. தொலைவிலுள்ளது. புலவர்