மடம், மௌன 344 குருசாமி மடம். போத குரு மடம், திருப்பூவண ஊராட்சி ஒன்றியத்தின் அலுவலகம். வரலாற்று ஆசிரியர்கள் புகழ் பாடும் திருப்பூவணம் பட்டயம் இவ்வூரில் அகப்பட்டது; 13-ஆம் நூற்றாண்டில் இது வெளியிடப்பட்டது. சடாவர்மன் குலசேகரனுக்கு இராஜகெம்பீரன் என்ற புனை பெயர் பெற்றிருந்தாயும் பழைய ஊர்கள் பலவற்றைச் சேர்த்து இராஜ கெம்பீரம் என்ற ஊரைத் தோற்றுவித்ததாயும் இப்பட்டயம் தெரிவிக்கிறது. இராஜ கெம்பீரம் என்னும் ஊர் திருப்பாச்சேத்திக்கும் மானாமதுரைக்கும் இடைப் பட்டது. தஞ்சை மாவட்டத்துத் திருவிடைமருதூர் அருகே ஒரு திருப்பூவணம் இருக்கிறது. எடுத்தாயிரம் உடையார் கோயில்: திருப்பூவணத்தி லிருந்து 13 கி. மீ. தொலைவிலுள்ளது. இங்கிருந்த பெரிய கோவில் ஒன்றைப் பிரித்துத் திருப்பூவணத்தில் தாம் கட்டுவதாகக் கூன் பாண்டியன் கனவு கண்டதாக வும், ஓராயிரம் பேர் உதவியுடன் மறுநாளே இக் கோவிலைப் பிரித்துப் பிறகு திருப்பூவணத்தில் அமைத்த தாகவும் கூறப்படுகிறது. இதனால் ஓராயிரம் பேர் துணை இருப்பின் எச் செயலையும் நிறைவேற்றலாம் என்ற கருத்து இவ்வட்டாரத்தில் பழமொழி போலப் பரவி யுளது. பூவந்தி: (ம.தொ.1,937) வைகையின் வடகரையி லுள்ள இவ்வூரின் பெயர் பூவேந்தி. இராமநாதபுரம் அரசர்கள் மதுரைக்குச் செல்லும்போது இங்கு தங்கி வந்தனர். பூவந்திக் கண்மாய் 40,000 ஏக்கர் நிலத் திற்குநீர் வழங்குகிறது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/346
Appearance