உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 சேதுபதிகள் எப்போது தோன்றினார்கள் என்ப தைப் பற்றி ஒன்றும் உறுதியாக தெரியவில்லை. சேதுபதிகள் ஸ்ரீராம பிரானால் நியமிக்கப் பெற்றதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. நாயக்கர் ஆட்சிக்கு ஓரா யிரம் ஆண்டு முன்னரே சேதுபதிகள் இருந்து வந்ததாக ஆங்கிலேய அறிஞர் சிலர் கருதுகின்றனர். பாண்டியப் பேரரசர் காலந் தொடங்கி, இரோமேசு வரத்தை ஒட்டிய கடற்கரைப் பகுதி தமிழகத்தோடு கடல் வாணிக உறவு கொண்டிருந்த அயலவர் கையில் இருந்தது. இங்கு எப்போதும் குழப்பமே நிலவியது. கொள்ளைக் கூட்டத்தினர் வைத்ததே இங்கு சட்டமாக இருந்தது. இவர்கள் இராமேசுவரத்திற்கு செல்லும் யாத் திரீகர்களைத் துன்புறுத்தினர். மதுரை நாயக்க மன்னர்கள் யாத்திரீகரின் நலம் கருதி காடு வெட்டியும், சாலைகள் அமைத்தும், சத்திரங்கள் நிறுவியும் பாதுகாப்புக்காகக்கோட்டைகள் கட்டியும், காவலர்கள் நியமித்தும் வந்தனர். மறவர் தலைவர் ஒருவரின் பொறுப்பிலேயே மறவர் நாட்டின் ஆட்சியை ஒப்படைப்பதென முத்துகிருஷ்ண நாயக்கர் என் ற மதுரையை ஆண்ட மன்னன் முடிவு செய்தான். 1605-இல் சடைக்கத் தேவர் என்ற தலைவனுக்கு உடை யான் சேதுபதி என்ற பட்டம் வழங்கப் பெற்றது. இதற்கு முன் இருந்த மறவர் தலைவர்களுக்கு ஆட்சிப் பொறுப்பு இல்லை. சேதுபதி- பொருள் சேது என்னும் சொல் பாலம் என்று பொருள்படும். ராமபிரான் தம் பெரும்படையுடன் இலங்கை செல்லவேண்டி, வானரத்தலைவர்களைக் கொண்டு கட்டு .