' 349 இந்நகர் சிவகங்கையிலிருந்து 26 மைல் தொலை விலும், முதுகுளத்தூரிலிருந்து 16 மைலிலும், இராம நாதபுரத்திலிருந்து 23 மைல் தொலைவிலும் மதுரையி லிருந்து 47 மைல் தொலைவிலும் அமைந்திருக்கிறது. பல அலுவலங்களும், மரம் - ஓடு வணிக நிலையங்களும் கத்தோலிக்க தேவாலயமும் சுருக்கெழுத்துப் பள்ளிகள் பலவும் உள்ளன. சிவன் கோவில் எடுப்பான தோற்றம் உடையது. வேளாண்மைப் பண்ணையையும் வேளாண்மைப் பள்ளியையும் அரசினர் இங்கு ஏற்படுத்தியிருக்கின்றனர். வைகை ஆற்றில் உறைக் கிணறுகள் ஏராளமாகப் பொருத்தப்பட்டுள்ளன. வைகையின் மறுகரையில் பரமக்குடிக்கு எதிரே எமனேசுவரம் உள்ளது. நெசவுத்துறையில் வல்லவர் களாகிய சௌராஷ்டிரர் இங்கு வாழ்கின்றனர். தச்சுத் தொழிலாளரும் மிகுதி. பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் 37 சிற்றூர்கள் உடையது. பேரூராட்சி மன்றம் ஒன்றேனும் இல்லை. இரயில் வசதியும் பாசனவசதியும் உண்டு. பல ஊர்கள் வளமாக உள்ளன. என்ற கமுதக்குடி இயிரல் நிலையத்துக்கருகில் கூத்தன்கால் அல்லது வேணுநாத உடைய பிள்ளைக்கால் கால்வாய், ஆற்றிலிருந்து பிரிகிறது. பரமக்குடியை இவ்வாற்றிவிருந்து பல கிளைகள் பிரிந்து சென்று பல கண்மாய்களை (ஏரிகளை) நிரப்புகின்றன. குறிப்பிடத்தக்க ஊர்கள் இல்லை. அடுத்தும் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் இது இளையான்குடி பேரூராட்சியையும் 55 ஊராட்சி மன்றங்களையும் கொண்டது. வளம் நிறைந்தது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/351
Appearance