உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை 861 பெற்ற முஸ்லிம் மகான்கள் தொண்டியில் அடங்கியிருக்கின்றனர். யாழ்ப்பாணத் தொடர்பு: தொண்டியிலிருந்து யாழ்ப் பாணம் 30 மைல் (48 கி.மீ.) தொண்டியிலிருந்து அதிகாலையில் புறப்பட்டு அங்குச் சென்று அலுவல்களை முடித்துக் கொண்டு மாலை யில் யாழ்ப்பாணத்திலிருந்து திருமபி வந்து விடுவது வழக்கமாக இருக்கிறது. 1890 வரை பாய்மரக்கப்பலில் தொண்டியிலிருந்து கொழும்புக்குச் செல்ல 25 காசு தான் கட்டணமாக இருந்ததாம். 1890 முதல் 1915 வரை தொண்டிக்கும் கொழும்புக்கும் நீராவிக் கப்பல் போக்குவரத்து இருந்தது. அதன் பின்னர் தூத்துக்குடித் துறைமுகம் விரிவடைந்தது. அதனால் கொழும்புக்குச் செல்லும் இராமநாதபுர மாவட்டத்தாரும் தூத்துக்குடி வழியாகச் சென்றனர். இதனால் தொண்டி வழியாக சரக்குகள் மட்டும் அனுப்பப்பட்டன. பின்னர் தனுஷ் கோடி வழி இலங்கைக்கு இரயில் தொடர்பு ஏற்பட்டுக் கோடிக்கரையில் போலவே தொண்டியிலும் வளம் குன்றிற்று.வாழ்வு நசித்தது. பொலிவு போயிற்று. இங்கிலாந்துத் தொடர்பு: சென்ற நூற்றாண்டில் இங்கிலாந்திலிருந்து சிமெண்டும் பிறபொருள்களும் இத் துறைமுகத்துக்கு வந்தன. பர்மாத் தொடர்பு: பர்மாவிலிருந்து நீராவிக் கப்பல் களிலும் 35 டன் வரை ஏற்றக் கூடிய லாஞ்சுகளிலும் அரிசி, மரம் ஆகியவை வந்தன. பிறகு இவ்வர்த்தகம் தூத்துக்குடி, நாகபட்டினம் துறைமுகங்களுக்கு மாறிற்று தஞ்சை மாவட்டத்திலுள்ள சிறு துறை முகங்கள் போலவே தொண்டியும் அதன் முக்கியத்து வத்தை இழந்தது. இ. -23