363 புவியியல் வளம்: வாழைக்குளத்தின் ஓரத்தில் 'கார்னட்' என்னும் புவியியல் பொருள் விளைகிறது. இது விலைமிக்கக் கறுஞ்சிவப்புக்கல். கல்வி: இவ்வூரிலுள்ள இஸ்லாமியக் கல்வி நிலையத் தில் அரபிய, பாரசீக மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. நூறு ஆண்டுகளாக இலங்கையரும் இங்கு வந்து பயில் கிறார்கள். மருத்துவ வசதி; 1915 வரை இராமேசுவர யாத்ரீகர் இவ்வழியே சென்று வந்தனர். தஞ்சை அரசியார் இவ் வழி சென்றபோது வயிற்றுவலியால் வருந்தினாராம். வைத்தியர் ஒருவரும் தொண்டியில் இல்லை என்பதை அறிந்து இவ்வூரில் மருத்துவநிலையம் தொடங்க மச்சூ, குமானி என்ற இரு ஊர்களைக் கொடையாக வழங் கினாராம். அந்த மானியத்தைக் கொண்டு நிறுவப் பெற்றதே இப்போது தொண்டியிலுள்ள மருத்துவ நிலையம். நீராட்ட, கங்கை நீர்: இராமநாதசுவாமிக்கு அலகபாத் பிரயாகையிலிருந்து இரயில் வழியாக இப்போது கங்கைநீர் வருகிறது. இராமேசுவரத்துக்கு இரயில போக்குவரத்து ஏற்படுவதற்குமுன் ஒவ்வொரு நாளும் சேதுரஸ்தாவில் இவ்வூர்வழியே காவடி மூலம் இராமேசுவரத்துக்கு அபிஷேகத்துக்குச் சென்று வந்தது. பல உண்டு. பள்ளி வாசல்கள்: தொண்டியில் பள்ளிவாசல்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கது கிழக்குத் தெருவிலுள்ள பள்ளிவாசல். முத்துச்சிலாபத்தில் பயன் பெறாவிடினும், இறை அருளால் காகத்தின் வாயிலாக எதிர்பாராது இரு பெரிய நன்முத்துக்கள் கிடைத்த தால் ஷெய்கு உத்மான் என்பார் இதைக் கட்டினார் என்றும் இப்பள்ளி வாசலிலேயே ஊழியம் செய்து தம்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/365
Appearance