371 புராணம் குறிப்பிடும் ஊரும் இதுவே. சிவன் கோவில் இருந்த இடத்திலேயே கத்தோலிக்கக் கோவில் கட்டப் பட்டிருப்பதாகச் சிலர் இந்நூலாசிரியரிடம் கூறினர். சிவன் கோவில் இருந்த இடம் என்று வேறு சிலர் ஒரு மேட்டைச் சுட்டிக் காட்டினர். சங்ககால வள்ளல் வாழ்ந்த ஊர் இதுவே. எழுவருள் ஒருவரான ஓரி சேது இவ்வூர் சேது நாட்டின் வட எல்லையாக இருந்தது. எனவே இங்கு சோழ மண்டலத்திலிருந்து நாட்டைக் காக்கக் காவல் கோட்டையும் கொத்தளங் களும் அமைத்திருந்தனர். சேதுபதியின் நெருங்கிய உறவினர் ஒருவர் இங்கு அவருடைய பிரதிநிதியாக இருந்து வந்தார். இவ்வூரிலுள்ள கோட்டை என்னும் பகுதிக்குள் கொந்தகை வேளாளர் என்ற இனத்தார் (ஸ்ரீ வைகுண்டம் கோட்டைப் பிள்ளைமார் போல) வாழ்ந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்துக்குக் குடியேறி விட்டனராம். இராமநாதபுரம் ஜமீனில் ஓரியூர் ஒரு தாலுகாவாக இருந்தது. பழைய ஓரியூரில் மறவர்கள் வாழ்கின்றனர். ஏனைய பகுதிகளில் கத்தோலிக்கர் வாழ்கின்றனர் இங்கு கத்தோலிக்கம் பரவியது பற்றிக் கூறப்படும் செய்தியாவது: கிறித்தவ சமயத்தைப் பரப்பிய அருளானந்தர் என்ற மேனாட்டுப் பாதிரியாரை வெட்ட, ஒரு பிரதிநிதி கிழவன் சேதுபதி ஆணைப்படி, பாம்பாற்றங்கரையில் அமைந்த ஓரியூருக்கு 1693-இல் அனுப்பப்பட்டார். சேது மன்னனின் ஆணைப்படி, சேதுபதியின் உறவின ரான ஓரியூர்த்தலைவன் ஓரியூர்க் கோட்டையின் மருங்கே அமைந்த பெரும் பரப்பில் அருளானந்தர் சிரத்தை
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/373
Appearance