உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

373 தென்னிந்தியா முழுவதுமிருந்து கத்தோலிக்கர் ஓரியூருக்கு வருகின்றனர். பிள்ளை வரம் வேண்டுவோர் இத்தேவாலயத்தைச் சுற்றி தென்னம்பிள்ளை வைக் கிறார்கள். இவ்வூரில் புதன் கிழமைகளில் சந்தை கூடு அருளானந்தர் தலை வெட்டப்பட்டது புதன் கிறது. கிழமையில்தான். நாரை, கொக்கு போன்ற பறவைகளின் இயற்கை உரம் கிடைப்பதால் இவ்வூர் நிலங்கள் நல்ல மகசூல் கொடுக்கின்றன. தேபிரித்தோ நினைவாக நடைபெறும் திருவிழாவும் உயர்நிலைப்பள்ளியும் இவ்வூருக்குப் புகழ் தருவன். தேபிரித்தோ தேவாலயத்திற்கு வடக்கே பாம்பாறு செல்லுகிறது. அந்த ஆறு தஞ்சை- இராமநாதபுர மாவட்டங்களின் எல்லையாக அமைகிறது. ஆற்றின் எதிர்க்கரையில் பாடல்பெற்ற திருப்புனல்வாயில் உளது. திருப்புனல் வாயில், கடற்கரையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது. பாண்டிய மன்னர்கள் இக் கோவிலைக் கட்டியபோது. கடற்கரை இவ்வூரருகே இருந்திருக்கலாம். . . திருப்புனல்வாயில், பாண்டி நாட்டுப் பழம்பதி. இறைவன் பழம்பதிநாதர். பாண்டி நாடே பழம்பதி என்பது மாணிக்கவாசகர் வாக்கு. பாண்டி 14 தலங் களின் மூர்த்திகளும் இங்கு நிறுவப் பெற்றுள்ளன. இது தேவார காலத்திற்குப் பின்னர் ஏற்பட்ட செயலாக இருக்க வேண்டும். மூலத்தான மூர்த்தியின் பெரிய உருவம், கருவறை யின் அமைப்பு, கோபுரத்தின் நிழல் சாயாத்தன்மை-