உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சேதுபதி தந்திரமாகக் கொலை செய்யப்பட்டார். இதனால் திருமலை நாயக்கர் இராமநாதபுரம் சீமையை இராமநாதபுரம் சிவகங்கை திருவாடானை என்ற மூன்று பகுதிகளாகப் பிரித்து மூன்றுக்கும் தனித் தனிச் சிற்றர சர்களை நியமித்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு சிற்றரசுகள் இணைந்தன. திருமலைச் சேதுபதி இராமநாதபுரத்து மன்னராக, திருமலை நாயக்கர் இவரை நியமித்தார். இவர் 25 ஆண்டுக் காலம் சேதுபதி யாக இருந்தார். இவர் காலத்தில் சேது நாட்டின் எல்லை மன்னார்குடி,பட்டுக்கோட்டை, திருவாரூர் வரை பரவிற்று. மைசூர் மன்னரான ஐதர் அலி, 1659-இல் திருமலை நாயக்கருடன் போர் புரியத் தன் படைகளை மதுரைக்கு அனுப்பினார்.திருமலை நாயக்கர், திருமலைச் சேதுபதியின் உதவியை நாடினார். அவர் ஒரே நாளில் 25,000 போர் வீரரைத் திரட்டி, தம் படையுடன் மதுரை சென்று மைசூர்ப் படையை முறியடித்தார். மதுரை நகரினின் றும் அவர்களை விரட்ட திருமலை நாயக்கருக்கு உதவினார். அதற்கு நன்றி கூறும் முகமாக 'தாலிக்கு வேலி' [அரசி யின் உயிரைக் காத்தவர்] என்ற பட்டமும் அரிமுகப் பல்லக்கு என்ற பரிசிலும் திருப்பூவணம், திருச்சுழி, பள்ளி மடம் ஆகிய பகுதிகளையும், நவராத்திரி விழா கொண் டாடும் உரிமையையும் திருமலை நாயக்கர், திருமலைச் சேதுபதிக்கும் அவனுடைய சந்ததியினருக்கும் வழங் கினார். சேதுபதிகள் கட்டவேண்டிய கப்பத்தையும் விட்டுக் கொடுத்தார். தங்கத்தில் துர்கை விக்கிரகம் ஒன்றையும் திருமலை நாயக்கர் சேதுபதிக்கு வழங்கினார். விவரம் இந்நூலின் பிறிதொரு பகுதியில் காண்க.