883 பஸ் போக்குவரத்து, தொலைபேசி வசதிகள் இத் நகரில் மிகவும் பெருகியுள்ளன. அரண்மனை போன்ற கட்டிடங்கள், ஆயிரம் சன்னல் வீடு, நகராண்மைக் கழகம் நடத்தும் ஊமை- செவிடர் பள்ளி, மெ.செ.மெ. மெ. குடும்பத்தார் சிறப்பாக நடத்திவரும் தர்ம உயர் நிலைப்பள்ளி; பாரதியார் பாடல் பெற்ற ஹிந்து மதாபிமான சங்கம் கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ்வளர்க்கத் தமிழ் நாடெங்கும் தூண்டுகோலாக இருக்கும் கம்பன் கழகம் இவற்றையுடையது காரைக்குடி. திங்கட்கிழமை தோறும் இங்கு ஒரு பெரிய சந்தை கூடுகிறது. தேவகோட்டை ரோடு இரயில் நிலையத்துக்கு அருகே ஒரு பெரிய தொழிற்பேட்டை இயங்குகிறது. திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் இவ்வொன்றியம் இம்மாவட்டத்தின் வடகோடி யில் திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்தது. . பாலாறு மணிமுத்தாறு என்னும் சிற்றாறுகள் பாய்ந்து திருப்பத்தூர், நெற்குப்பை,மகிபாலன்பட்டி முதலிய பல ஊர்களை வளப்படுத்துகின்றன. குறிஞ்சி நிலப்பகுதிகளாய் காஞ்சாத்து மலையின் அடிவாரத்தில் பூலாங்குறிச்சி, செவ்வூர், திருக்கோளக்குடி என்னும் ஊர்களும் சிதறிய மலையையொட்டி வேலங்குடியும் உள்ளன. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புற நானூற்றுப் புகழ் பெற்ற பூங்குன்ற நாடும் அதன் தலைநகராகிய பூங்குன்றமும் இவ்வொன்றியத்தில் உள்ளன. சரளைக்கல் உடைப்பதற்கேற்ற பாறைகள் பிள்ளையார்பட்டியில் இருக்கின்றன. ஆத்திக் காட்டுக்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/387
Appearance