891 . ஊர்ப் பெயர் பழமையானது. இளம் பூரணர் உரையில் "எட்குப்பை, நெற்குப்பை; எள்ளொரு விராய அரசி” என்ற தொடர் வருகிறது. திருச்சி, தஞ்சை,செங்கை, தெ.ஆ. மாவட்டங்களில் நெற்குப்பை என்னும் பெயரில் பத்து ஊர்கள் உள்ளன. குப்பை,மேனி என்பன விளைவு அல்லது கண்டு முதலைக் குறிப்பன. " நெற்குப்பைச் சிவன் கோவிலில் 1936-இல் தோண்டி எடுக்கப்பெற்ற திருவுருவங்கள் 10-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டன என்று புதுவை பிரெஞ்சு இன்ஸ்டிட்டி யூட்டில் முடிவு செய்துள்ளனர். மணிமுத்தாற்றின் கரையில் இவ்வூர் அமைந்திருக்கிறது. அந்த ஆற்றால் இவ்வூர் பெரிய கண்மாய் நிரம்புகிறது. இவ்வூரிலிருந்த ஒரு துர்க்கையின் திருவுருவம் சென்னை கன்னிமரா மியூசியத்தில் கொலுவீற்றுவருகிறது. இவ்வூர் நாட்டார் சமூகத் தலைவர்க்கு பாண்டிய மன்னர்கள் வழங்கிய பெரிய அம்பலகாரர் என்ற பட்டம் நிலவி வருகிறது. நூறு ஆண்டுகளாக நடை பெற்று வரும் ராம.சா. மடத்தின் ஆதரவில் சாத்தப்பா உயர் நிலைப்பள்ளியும், பழநியப்ப செட்டியார் கொடையால் ஆரம்ப சுகாதார நிலையமும் ஏற்பட்டு அரசினரால் நடத்தப்பட்டு வரு கின்றன. பல துறைகளில் இவ்வூர் முன்னேறி வரு கிறது. திருவிழாக்களும் தமிழ்ப் பற்றும் அரசியல் உணர்ச்சியும் மிகுந்த ஊர். கண்டவராயன்பட்டி: நகரத்தார் வாழும் ஊர்களில் ஒன்று. கிணற்றடி காளியம்மன் கோவில் விழா சிறப் பானது. இங்கிருந்து பையூர் வழியாக வேலங்குடிக் குடிக்கு ஒரு சாலை செல்லுகிறது. கீழச்சிவற்பட்டி: விராமதி என்னும் சிற்றூரையும் சேர்ந்த அழகாபுரியையும் திருச்சி மாவட்டத்தைச்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/393
Appearance