உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

397 டில் பாண்டியர்காலத்தில் அமைக்கப்பட்டது. எனவே; இது பல்லவர் குகைக் கோவில்களுக்கு முற்பட்டது. இவ்வூரின் பழைய பெயர் எருக்காட்டூர். இவ்வூர்த் தலைவன் பெருபரணன். அவுன் பாண்டியருக்கு உட்பட்ட சிற்றரசன். அவன் காலத்தியது இக் குகைக் கோவில், எருக்காட்டூர், புறநாற்றூற்றில் 397-ஆம் பாடலை யாத்த தாயன் கண்ணனார் உட்படச் சங்ககாலப் புலவர் பலர் தோன்றிய ஊர். தமிழ்-பிராமி கல்வெட்டு ஒன்று இக்குகையில் இருக்கிறது. கி.பி. முதல் நூற்றாண்டில் தொடங்கி, ஆறாம் நூ. வரை இவ்வெழுத்து பரவியது என்றும் இதன் இறுதிநிலை 4-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு பிள்ளையார் பட்டியில் ஏற்பட்டது என்றும் ஆராய்ச்சி அறிஞர் ஐராவதம் மகாதேவன், ஐ. ஏ. எஸ். கருதுகிறார். உலகத் தமிழ் மாநாடுகள் மூன்றிலும் பிள்ளை யார் பட்டிக் கல்வெட்டைப் பற்றி விவாதிக்கப்பட்டிருக் கிறது கற்பகவிநாயகர் தலையில் சடை (சடாமுனி ) இருக் கிறது, கிரீடம் இல்லை. யோகநிலை. வயிறு (தொந்தி) சிவலிங்கத்துடன் வலம்புரி குறைவு. வலது கையில் விநாயகராகக் காட்சி தருகிறது. இடது தண்டி முறிந் திருக்கிறது. இரு சுரங்களே உள்ளன. வயிற்றில் மூன்று பட்டைகள் உள்ளன. வெள்ளை ஆடை மட்டுமே உடுத்துவது மரபு. பிள்ளையாருக்கு உற்சவங்கள் சிறப்பாக நடை பெறுவது தமிழ்நாட்டில் இத்தலத்தில் கான் என்று உறுதியாகச் சொல்லலாம். மாதச் சதுர்த்திகளும் ஆவணியில் வளர்பிறைச் சதுர்த்தியுடன் முடியும் 10 நாள் பெருவிழாவும் நிகழ்கின்றன. சகஸ்ரநாம