38 மதுரைக்குச் சென்று முசுலிம் படையைத் தோற்கடித் தார். ஆ 3 கிழவன் சேதுபதி மதுரை, தஞ்சை மன்னர்களின் படைகளையெல்லாம் முறியடித்தான். டச்சுக்காரர் களுடன் சேர்ந்து முத்துக் குளிப்புபற்றி உடன்படிக்கை கள் செய்து சிறப்புற்றான்.புதுக்கோட்டை ஒரு தனி ஆட்சியாக அமைத்தவன் அவனே என்றும், தான் மணந்துகொண்ட ஒரு கள்ளர் சமூகப்பெண்ணின் தம்பிக்கு அந்தப் பகுதியை எழுதிக் கொடுத்தான் என்றும் கூறுவர். கிழவன் சேதுபதி காலத்தில்தான் இராமநாதபுரம், சேதுபதிகளின் தலைநகராயிற்று என்றும் அதற்கு முன்னர் போகளுர் என்னுமிடத்தில் அவர்கள் ஆண்டு வந்தனர் என்றும் கூறுவர். கிழவன் சேதுபதி காலத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. . கிழவன் சேதுபதி தஞ்சை மன்னனை வென்று அவன் ஆட்சியிலுள்ள சில பகுதிகளையும் கைப்பற்றினான். கிழவன் சேதுபதியின்மீது பொறாமை கொண்டு இராணி மங்கம்மாள் ஒரு படையை இராமநாதபுரத்திற்கு அனுப் பினார். கிழவன் சேதுபதிக்கு 47 மனைவியர் இருந்தனர். அவன் இறந்தபோது எல்லோரும் உடன் கட்டை ஏறினர். அந்த இடத்தை இன்னும் இராமநாதபுரத்தில் காணலாம். ஜான் டி பிரிட்டோ என்ற கத்தோலிக்கப் பாதிரி யார் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதும் ஓரியூரில் அவர் தூக்கிலிடப்பட்டதும் கிழவன் சேதுபதியின் ஆட்சி காலத்தில்தான். கிறத்தவ மதமாற்றம் 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இராமநாதபுரம் சீமையில் புளியால், சருகணி முதலிய சில பகுதிகளில் காட்டுத் தீ
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/40
Appearance