410 மேல வண்ணாரிருப்பு: பழங்கால மண்பாண்டங்கள் கிடைக்கின்றன. மலைமீது இச்சிற்றூருக்குச் சாலைப் போடப்பட்டிருக்கிறது. மட்டியூர் திருக்களம்பூர்: முதல் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190-1218) ஆட்சிக் காலத்தில் அவனுக்கும் மூன்றாம் குலோத்துங்கச் சோழனுக்கும் நடந்த போரில் அவன் பாண்டி நாட்டிற்குத் தன் நாட்டிற்குத் தன் ஏழகப்படையினை அனுப்பிப் படையெடுத்தான். மட்டியூர்ப் போரில் பாண்டிப் படைகள் பேரழிவுக்குள்ளாகிப் புறங்காட்டி ஓடின. இதன் பிறகு குலோத்துங்கச்சோழன் மதுரையை அடைந்து சோழ பாண்டியன், திரிபுவன வீரதேவன் முதலிய பட்டங்களுடன் கி.பி. 1202-இல் வீராபிடேகம் செய்து கொண்டான். உலக உலகன் பட்டி: உலகம் பட்டி என மருவி வழங்கும் இச்சிற்றூர், திருச்சி மாவட்டத்துப் பொன்னமரா வதிக்கு அருகே உளது. இறைவன் - இறைவி நாதர், உலக நாயகி. ஊரெல்லையிலுள்ள ஞானியார் மடத்தில் முருகன் கோயில் ஒன்று உளது. நகரத்தார் வாழும் 96 ஊர்களுள் இது வடகோடியில் இருப்பதால், ஊருக்குக் கடைசி உலகம்பட்டி என்ற சொல்லாட்சி உண்டு. மருதிப்பட்டி: திருப்பத்தூர் - சிங்கம்புணரி சாலையில், முறையூர்க்குச் செல்லும் சாலைச் சந்திப்பில் இவ்வூருளது. வடக்கே அரளிப் பாறைக்கு ஒரு சாலை பிரிகிறது. இவ்வூர் பெரிய மருது பெயரால் ஏற்பட்டது. என்றும், வடக்கே தேனம்மாள் பட்டிக்குச் சமீபமாக உள்ள சிறுமருதூர் என்னும் சிற்றூர் சின்னமருது பெயரால் அமைந்ததென்றும் கூறுவர்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/412
Appearance