உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 தொங்கு தேனிறாலிலிருந்து பொங்கி வழிந்து வீழ்ந்த தேனையே பரம்பு நாட்டு மக்கள் பயன்படுத்தினர். பிரான்மலையில் காணத்தக்கவை: 57 தீர்த்தங்கள், மலை யுச்சியிலுள்ள பீரங்கி மேடை, வெள்ளைப் பிள்ளையார். பழமையான கல்வெட்டுக்கள், எண்ணி 108 எண்ணாமல் 108 நீர்ச்சுனைகள், புவியியல் ஆய்வாளர் நிலையம், எப் போதும் நிழல் நிறைந்த 'பொழுது விழுந்தான் சுனை' மஞ்சள் நிற நீருடையதும் ஊதினால் மஞ்சள் ஒதுங்கி விடும் இயல்புடையதுமாகிய 'மஞ்சள் சுனை,'காசிச் சனை. பிரான்மலையில் கிடைப்பது: சுவையான குடிநீர், கார்த்திகை முதல் வைகாசி வரை பாலப்பழம், கொம்புத் தேன். பிரான்மலையின் தேவை: பொறியியல் மாணவர்கள் செய் முறையில் 'சர்வே' செய்யத் தெரிந்து கொள்ளச் சில நாட்கள் மலைப் பகுதிகளுக்குச் செல்லுவர். அதற்கு ஏற்ற இடம் பிரான்மலை. இத்தகைய மாணவர் தொகுப் பாகத் தங்குவதற்கு விடுதி கட்டி, ஏனைய நாட்களில் இறைவழிபாட்டுக்கு வருபவர்க்கு வாடகைக்கு விடலாம் அல்லது மலையேறும் பயிற்சியில் உயர் பள்ளி மாணவர் களை ஊக்குவிக்க இங்கு வரவழைக்கலாம். இத்தகைய ஏற்பாடுகள் செய்து, வரலாறும் இலக்கியமும் புகழ் பாடும் பிரான்மலைக்கு வாழ்வளிக்க வேண்டும். மல்லாக்கோட்டை: மருதரசர் காலத்தில் இன்றைய திருப்பத்தூர்த் தாலுகா, மல்லாக்கோட்டைத் தாலுகா என வழங்கப்பெற்று வந்தது. கண்ண அருவியூர்: பாலாற்றின் பாலாற்றின் தென்கரையில் மங்கலப்பட்டி முதலிய 18 ஊர்கள் கொண்டது கேரள சிங்க வளநாடு. இங்கு திசை ஆயிரத்து ஐநூறுவர்