424 பாலும் இந்த மரத்தில் செய்யப்பட்டவை; பாலை மரம் நிறைந்த பதினாறு ஊர்கள் பாலையநாடு எனப் பெயர் பெற்றுள. இவ்வூர்களுள் இவ்வூர்களுள் கானாடுகாத்தானும் பள்ளத் தூரும் அடங்கியன. 'பாலையநாடு எஸ்டேட் உரிமை பற்றிப் பல்லாண்டுகள் வழக்கு நடந்தது. ஒன்றியத்தின் மக்கள் தொகை 62,918. பரப்பு 175 சதுரமைல். சாக்கோட்டை: இது புதுவயலிலிருந்து ஒரு கல் தொலை விலுள்ள சிற்றூர். ஒன்றியத்தின் அலுவலகமும் வீர சேகரர் - உமையாம்பிகை ஆலயமும் இவ்வூரில் இருக் கின்றன. வீரவன புராணமும் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய புராணமும் இவ்வூருக்கு உண்டு. கானாடுகாத்தான் : கானாடு என்பது பழந்தமிழ் நாட்டுப் பகுதிகளுள் ஒன்று. இந்நாட்டு அரசர் காளை யார் கோவிலிலிருந்து ஆட்சி செய்தனர். அவர் களுடைய எல்லையில் இந்த ஊர் அமைந்திருந்ததால், தம் நாட்டைக் காப்பதற்குக் காவலர்களை இங்கு வைத்திருந்தனர். இதனால் இவ்வூர் கானாடு காத்தான் எனப் பெயர் பெற்றது. இப்போது இவ்வூர் இராமநாதபுர மாவட்டத்து எல்லையூராக இருக்கிறது. இவ்வூர்ப் பெரு மக்கள் அவ் வப்போது ஆட்சியிலிருக்கும் அரசினைக் காப்பவர்களாக வும் ஐக்கிய நாடுகள் அவையைக் காப்பவராகவும் உள்ளனர். கானாடு காத்தவர் வழித் தோன்றல் என்ப தில் தடையில்லை! இந்நூற்றாண்டின் அரசியலில் இவ்வூரார் செல் வாக்குப் பெற்றுள்ளனர். சர் எம்.சிடி. முத்தைய செட்டியார், அவர் மகன் சிதம்பரம் செட்டியார்,
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/426
Appearance