உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

427 னிருந்தபடி இருந்த இடம் கொத்தடி ஐயனார். போதுமென்றிருக்கிறார் கொத்தடி என்னும் பெயரொடு மதுரைமாநகர் எல்லையிலுள்ள அரசரடி, அனுப்பானடி என்பன ஒப்பு நோக்கத்தக்கன. அடி- வயல். . சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியும் பாத்திரத் தொழிற்சாலையும் பள்ளத்தூரின் பெருமைகள். இங்கு 1972-73-ஆம் கல்வியாண்டில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஏற்படுமென்று தெரிகிறது. கோட்டையூர்: பள்ளத்தூர்க்கும் காரைக்குடிக்கும் இடைப்பட்டது. பெருவணிகர் பலர் வாழுகின்றனர். வள்ளல் அழகப்பர் பிறந்த பதி. இங்கிருந்து அறந் தாங்கிக்கு ஒரு சாலை பிரிகிறது. ஊரின் வட எல்லையில், நகரக்கோயிலாலும் வழிவழி யாகச் செல்வாக்கும் ஆற்றலும் உடைய நாட்டார்களா லும் புகழ்பெற்ற வேலங்குடி இருக்கிறது. ஏழூர்ச் செவ் வாய்க்கு வேலங்குடி அம்மன் பள்ளத்தூருக்கும் கோட் யூருக்கும் இடையேயுள்ள கண்மாய்க்கு டை எழுந்தருளும். திருவேலங்குடி சூரைக்குடி: செட்டிநாடு இரயில் நிலை யத்திற்கு அண்மையிலும் குன்றக்குடிக்குச் செல்லும் வழியிலும் அமைந்த தலம். திருவேலங்குடி, ஆவுடைப் பொய்கை, மாலையிட்டார். ஆகியவை இவ்வூரின் உட்கடைச் சிற்றூர்கள். வன்னியர் சூரைக்குடிக்கோவில் தொன்மையும் சிற்பச்சிறப்பும் உடையது. 14-ஆம் நூற்றாண்டில் இவ்வூரை ஆண்ட விசயாலயத்தேவன் என்ற தலைவன் இக்கோவிலுக்குத் திருப்பணி செய்தான். ஏற்கெனவே இருந்த கோயில் முகமதியரால் அழிக்கப்பட்டதால்,