· 1 432 அருகே கடலில் கலக்கின்றன. காரைக்குடி- சிவகங்கை இரயில் பாதை இவ்வொன்றியத்தில் கல்லல், அரண் மனைச் சிறுவயல், பனங்குடி இரயில் நிலையங்கள் வழி யாய்ச்செல்லுகிறது. ஒன்றியத்தில் 44 ஊராட்சி மன்றங்கள் அடங்கி யுள. ஒன்றேனும் பேரூராட்சி அன்று. கல்லல் ஒன்றியத்தின் அலுவலகம் இங்கு இருக் கிறது. செட்டிநாட்டின் முக்கியமான ஊர்களுள் இது ஒன்று. இரயில் வசதியும் காரைக்குடியிலிருந்து இவ்வூர் வழியாகத் திருப்பத்தூர், மதகுபட்டி போன்ற களுக்குப் பஸ் வசதியும் இருந்து வருகின்றன. மணி முத்தாற்றின் கரையில் இவ்வூர் அமைந்திருக்கிறது. இங்கிருந்து காளையர் கோவிலுக்குச் செல்லலாம். ஊர் கண்ட மாணிக்கம்: வடமா அல்லாத பிராமணர் களுள் (அதாவது தமிழ் நாட்டுப் பிராமணர்களுள்) அஷ்டசஹஸ்ரம், பிரஹசர்ணம் என்ற பிரிவுகள் உண்டு. பிரஹசர்ணம் பிராமணர்கள் அனைவருமே இவ்வூரி லிருந்து பிற்காலத்தில் குடியேறியவர்கள் ஆவர். இவ்வூர் திருப்பத்தூரிலிருந்து கல்லல் சாலையில் 8 கி.மீ. தொலைவிலுளது. ஊர்ப் பெயர் கண்டரமாணிக்கம் என வழங்குகிறது. சிராவயல்: பிள்ளையார் பட்டியை அடுத்த சிற்றூர். ஆண்டுதோறும் தைத் திங்கள் மூன்றாம் நாளில் பெரிய அளவில் நிகழும் மஞ்சுவிரட்டு இம்மாவட்டத்தில் பெரிய திருவிழா. நாச்சியாபுரம் என்னும் ஊர் இவ்வூராட்சி எல்லைக்குட்பட்டது. அரண்மனைச் சிறுவயல் இது வர லாற்றுப் புகழ்பெற்ற ஊர். சேர சோழ பாண்டிய மன்னர் மூவரும் வழிபட்ட மும்முடியீசர் - கருணை நோக்கு அம்மை கோவிலையும்,
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/434
Appearance