உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

447 நகர்தான் மார்க்கட், விருதுநகர் வணிகர் வைத்தது தான் இந்தியாவில் ஏலக்காயின் விலை. இதைப்பற்றி இங்கு உள்ளவர்களிடம் கேட்டால் தென் ஆப்பிரிக்கா வைரத்துத்கும் இந்தியச் சணலுக்கும், இலங்கைத் தேயிலைக்கும் லண்டன் மார்க்கட்டில் வைத்ததுதானே விலை, அதுபோல எங்களூரில் விளையாத பொருள் களுக்கும் நாங்களே விலையை முடிவு செய்வதில் தவறு என்ன என்று கேட்பார்கள். ஏலக்காயை ஏல அரிசி ஆக்கியபின் எஞ்சும் தோலை வீணாக்காது பேல்போட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி அதையும் விற்றுப் பண மாக்கும் தனித்திறமை இவ்வணிகருக்கு உண்டு. யைக் $' 1962 கடலை எண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெய் கலந்துவிட்டதாகவும், சிலவகைக் கிழங்கு களைக் காப்பித்தூளில் சேர்த்து விற்றதாகவும் உளுந்துடன் கறம்பை மண்ணை இரண்டறக் கலந்து வழங்கியதாகவும் உப்பில் எகல் ஆற்று மணலைக் கலந்த தாகவும், தேயிலைக் கொழுந்தோடு மஞ்சணத்தி இலை யைச் சேர்த்து விற்றதாகவும் சிலர் அளவில் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். ஆண்டுகள்வரை தமிழ்நாடெங்கும் பொது வாழ்வில் விருதுநகருக்குக் பெயர் ஏற்பட்டது. நம்நாட்டு அனைவரும் இப்போது தரமான பொருள்களைப்பயன் படுத்திவருவதும் அரசினரும் அதில் ஆர்வம் காட்டிக் கலப்படத்தை ஒழித்துவருவதும் மகிழ்ச்சிக்குரியது. கெட்ட சில வணிகர் பொதுவாக இங்கு வியாபாரம் பெரிய அளவில் நடைபெறுகிறது. தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள கடைத்தெரு, பழைய டில்லியில் சாந்தினி சவுக்கைப் போலவே செல்வச் செழிப்பும் அசுத்தமும் நிறைந்தது. விருதுநகர் கடைகளின் முன்தோற்றம் - கல்கத்தா வில் மார்வாடிகளின் சலவைக்கல் அரண்மனைகளைப்போலவே