464 பெருமக்கள்: தமிழறிஞர் டி.எஸ். கந்தசாமி முதலியார், சங்கீத பூஷ்ணம் சாத்தூர், ஏ.ஜி.சுப்பிர மணியம், வில்லிசைப் புலவராகத் தமிழ்நாடெங்கும் புகழ்பெற்றுள்ள ஹோமியோபதி மருத்துவர் பிச்சைக் குட்டி ஆகியோரை இந்நகர் வழங்கியிருக்கிறது. சாத்தூரில் இருப்பவை: மாவட்ட முனிசீபின் நீதி மன்றம், மாவட்ட வேளாண்மைத் துறை அலுவலகம். பெரிய வியாபார நிலையங்கள். சாத்தூரின் பெருமை: (1) 1962-இல் அப்போதைய முதலமைச்சர் காமராஜ் இத்தொகுதியில் தேர்தலுக்கு நின்றபோது ஓருகோடி ரூபாய்ச் செலவில் தண்ணீர் வசதியும் புதை சாக்கடைத்திட்டமும் நிறைவேறியது. (2) சுவைமிக்க வெள்ளரிப்பிஞ்சு. (3) ஓலைப்பெட்டியில் அடைத்த (அ) சீனிமிட்டாய் (ஆ) கடலைமாவுச்சேவு. சாத்தூரின் தேவை: விரிந்து வரும் நகருக்கேற்ற பெரிய மருத்துவமனை. சந்தை நாள்: சனிக்கிழமை. பழமொழி: வேற்றூர் அரிசியும், வேற்றூர் விறகும் உண்டானால் சாத்தூரைபோல இல்லை. நகர் சௌகரியமான ஊர் விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் 57 சிற்றூர்களுடைய இவ்வொன்றியத்தின் வாழ்வு விருதுநகருடனும், துலுக்கப்பட்டி சிமிண்டு ஆலை, விருது ஸ்டீல் ரோலிங்மில்ஸ் ஆகிய தொழிற்சாலை களுடனும் இணைந்திருக்கிறது. இரயில் பாதையும் தேசிய நெடுஞ்சாலையும் இருப்பதால் போக்குவரத்து, பெரிய அளவில் நடைபெறுகிறது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/466
Appearance