468 விருதுநகர் - தென்காசி இரயில்பாதை இவ் வொன்றியத்தின் வழியாகச்செல்லுகிறது. மங்கலம், நமஸ்கரித்தான்பட்டி, வாடி; சுக்கிரவாரப்பட்டி, சல்வார்ப்பட்டி, நிறைமதி, ஆனையூர், ஆனைக்கூட்டம், கொத்தனேரி, தச்சக்குடி என்னும் ஊர்கள் உள்ளன. ஒன்றிய அலுவலகம் சிவகாசிக்கும் செங்கமல நாச்சியார்புரத்துக்கும் இடையேயுள்ள சாட்சியாபுரத் திலும், சுகாதார நிலையம் மங்கலம் புதுப்பட்டியிலும் உள்ளன. திருத்தங்கல் (ம.தொ.6,000) சிவகாசிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவு, இரயில் நிலையத்தை அடுத்தது. இவ்வூரின் பழமை பற்றியும் இங்குள்ள கல்வெட்டுக்களைப்பற்றியும் ஆராய்ச்சியாளர் சதாசிவப் பண்டாரத்தார் 'பாண்டியர் வரலாறு' என்னும் நூலில் எழுதியுள்ளார். இங்குள்ள குன்றின் உயரம் எழுபது அடி. இதன் மீது ஒரு பெருமாள் கோவிலும் அதைச் சேர்ந்து குகைக் குள் கருநெல்லிநாதர் என்ற சிவன் கோவிலும் அத னருகே பழநியாண்டவர் கோவிலும் உள்ளன. திருமங்கை ஆழ்வாரும் பூதத்தாழ்வாரும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். இங்கு கோவில் கொண்டுள்ள இறைவனுக்கு நின்ற நாராயணப் பெருமாள் என்றும், தாயாருக்குச் செங்கமல நாச்சியார் என்றும் பெயர். தாயார் பெயரால் செங்கமலநாச்சியார் புரம் என்ற ஊரும், பெருமாள் தங்கியதால் திருத்தங்கல் என்ற பெயருடன் இந்த ஊரும் ஏற்பட்டன. திருத்தங்கல் பெருமாள் ஆடிப்பூரத்துக்கு ஸ்ரீ வில்லிபுத் தூருக்கு எழுந்தருளுவார். திருத்தங்கல் என்பது திருத்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/470
Appearance