470 தார் என்பர். இங்கு மறவர் மிகுதியாக வாழ்கின்றனர். கரிசல்காடு ஏராளம். விளைபொருள்கள் - நெல், கம்பு; கேழ்வரகு. மாவட்டங்களில் கிருஷ்ணாபுரம்: சிவகாசியிலிருந்து 6 கி.மீ. தென் கிருஷ்ணாபுரம் என்ற பல ஊர்கள் உள்ளன. அவைபோல இவ்வூரும் மதுரையை ஆண்ட கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவர் பெயரால் ஏற்பட்டது. கிருஷ்ணப்பேரி என்ற ஊரும் தெலுங்கு பேசுவோர் வாழும் கிருஷ்ணம நாயக்கன்பட்டியும் அருகே உள்ளன. கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவிலாலும் வேளாண்மை யைப் பெருக்கும் மறவர்களாலும் புகழ்பெற்றிருக்கிறது. சாட்சியாபுரம்; சிவகாசியை ஒட்டிய பகுதி. கோட்ட ஆட்சி அலுவலகம் இங்கு இருக்கிறது. மா, கொய்யா. இலுமிச்சைத் தோப்புகள் நிறைந்தது. செங்கமலநாச்சியார்புரம்: திருத்தங்களிலிருந்து 3 கி. மீ. நாயக்கமார் செல்வாக்குள்ள ஊர். இவ்வூரினரான திரு. இராமசாமி நாயுடுவைப் பற்றி, இந்நூலில் இடங்களில் குறிப்பிட்டிருக்கிறோம். பல சொக்கம்பட்டி: சொக்கப்ப நாயக்கர் பெயரால் ஏற்பட்டது. கிருஷ்ணாபுரம் இங்கிருந்து 5 கி.மீ. . வடமலாபுரம்: நீர்வளமும் ஆசிரியப் பயிற்சிப்பள்ளி யும் உடையது. வாடி: (வாடியூர்) வெற்றிலை வாணிகம் மிகுதி. போடி எனச் சுருங்கக் கூறப்படும் போடிநாயக்கனூர் மதுரை மாவட்டத்திலும், வாடி என்னும் இரயில் சந்திப்பு மேற்கு இரயில் பகுதியிலும் இருக்கின்றன.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/472
Appearance