472 லாகப் பயிரிடப்படுகிறது. சோளம், மிளகாய் நிறையப் பயிரிடப்படுகின்றன. பந்துவார்ப்பட்டியிலும் சூரங்குடி யிலும் கடலையும் பிற இடங்களில் கரும்பும் பயிரிடப்படு கின்றன. ஐந்தாறு ஊர்களில் மட்டும் நெல் வேளாண்மை பெருமளவில் நடைபெறுகிறது. நென் மேனிச் சாலையில் ஆட்டுப்பண்ணை இருக்கிறது. சங்கரநத்தம், சுப்பிரமணியபுரம், உப்பத்தூர், அய்யம்பட்டு ஆகியவற்றில் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் உள்ளன. ஆலயட்டியும் ஆறுகாபுரமும் அப்பனேரியும் மம்சாபுரமும் இலட்சியக் கிராமங்களாக விளங்கு கின்றன. ஒருவகைச் சீமைக் கருவை பரவியிருப்பதால், விறகு தங்கு தடையின்றிக் கிடைக்கிறது. இதன் காயை ஆடும் மாடும் கழுதையும் தின்கின்றன. அவற்றின் சாணத்தால், மீண்டும் சீமைக்கருவை படர்கிறது. விறகுக்கு இம்மரத்தைப் பச்சையாக எரிக்கலாம். எரி பொருள்சத்தும் மிகுதி. நடந்து செல்லுபவர் இதன் முள் குத்தி, துயரப்படுகிறார்கள். அவர்கள் வாயிலாக மருத்துவர் பலர் வருவாய் பெறுகின்றனர். அரசின் ஆலம்பட்டி: சாத்தூரிலிருந்து 5கி.மீ. திட்டங்களில் பயனடைந்துள்ளது. செங்கற்சூளைகள் கூட்டுறவு முறையில் நடைபெறுகின்றன. . இருக்கங்குடி: சாத்தூரிலிருந்து 8 கி.மீ.அர்ச்சுனை, வைப்பாறு இரண்டாலும் வளமடைந்து வருவது. இத் தீவிலுள்ள மாரியம்மன் கோவில் புகழ் பெற்றது. ஆடி, தைத் திங்கள்களில் வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக் கில் மக்கள் கூடி மாரியம்மன் அருள் பெறுகின்றனர். உப்பத்தூர்: வேளாண்மை வளமும் ஆரம்ப சுகாதார நிலையமும் உடையது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/474
Appearance