உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

475 வெம்பக்கோட்டை : 3,000 மக்கள்வாழும் இச்சிற்றூர் சிவகாசியிலிருந்து நேர்தெற்கே 19 கி.மீ. தொலைவில் வயல்காடுகள் சூழ உளது. சாத்தூரிலிருந்து 19 கி.மீ. ஏழாயிரம் பண்ணையிலிருந்து 16 கி.மீ. குகன்பாறை: ஏழாயிரம் பண்ணைக்குத் தென்மேற்கே இருக்கிறது. இங்குள்ள குன்றின் உயரம் 50மீட்டர். கருங்கற்றூண் வேலைக்கு இக்குன்றில் கின்றனர். கல் உடைக் சிப்பிப்பாறை: ஏழாயிரம் பண்ணையிலிருந்து 6 கி. மீ. தொலைவு.சில தெருக்கள் திருநெல்வேலி மாவட்டத் தைச் சேர்ந்தன. அம்மாவட்டத்துக்கே முற்றிலும் மைப்பாறை,சிப்பிப்பாறையிலிருந்து உரிய ஊரான 5 கி.மீ. தொலைவில் இருக்கிறது. சிறு குன்றுகள் நிறைந்த சிப்பிப்பாறை, நாய் களால் புகழ்பெற்றது. சிப்பிப்பாறை நாய் கருமயிலை நிறமுடையது; இதன் உயரம் 31 அடி; நீளம் வால் உட்பட மூன்றடி. முகம் ஊசியாகவும் காது மடிந்தும் இருக்கும். வேட்டைக்குச் செல்லுவோர் இந்த நாய்களை வளர்த்து உடனழைத்துச் செல்லுவர். கம்பஞ்சோறும் சோளச்சோறும் இந்நாய்கள் விரும்பி உண்ணும். பாறைமீது ஒரு பெருமாள் கோயில் இருக்கிறது. செல்வாக்குப் பெற்ற நாயக்கர்கள் ஊர்களுள் இதுவும் ஒன்றாகும். பருத்தி அறைக்கும் ஆலை ஒன்று இவ்வூரில் இருந்து வருகிறது. 1942 சுலகத்தின்போது, கந்தசாமி என்ற புகழ் பெற்ற கொள்ளைக்காரன் வைத்தது இங்கே சட்டமாக இருந்தது. அவன் 1951இல் பிடிபட்டுத் தூக்கிலிடப் பட்டான். - .